நடைபயணத்தின் போது வயலில் இறங்கி நாற்று நட்ட அண்ணாமலை; நெகிழ்ச்சியுடன் பார்த்த விவசாயிகள்

தஞ்சையில் என் மண் என் மக்கள் பயணத்தின் போது வயலில் விவசாயிகள் நாற்றும் நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தானும் அவர்களுடன் இணைந்து நாற்று நடும் பணியில் ஈடுபட்டார்.

Share this Video

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் என் மண் என் மக்கள் நடை பயணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வயலில் நாற்று நட்டு பின்னர் வயல்கரையில் கூலித் தொழிலாளர்களுடன் பேசினார். அப்போது சாப்பிட்டிங்களா என நலம் விசாரித்து அவர்களுடன் சேர்ந்து வடை, டீ சாப்பிட்டு கொண்டு காலில் சேறு, சகதியுடன் நின்று கொண்டிருந்தார். 

யாருக்கெல்லாம் பேரக் குழந்தைகள் உள்ளனர் என கேள்வி கேட்டு பையனை விட பெண்கள் தான் அதிகம் பார்த்து கொள்கின்றனர் என்று கூறி உங்களுக்கு சேற்று புண் வராதா என்ன செய்வீர்கள், தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்வீர்களா, என எதார்த்தமாக சாதாரண மனிதனாக பேசினார்.

Related Video