இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:02 PM (IST) Dec 09
உலக கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
11:01 PM (IST) Dec 09
பாகிஸ்தானின் முதல் முப்படைத் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள அசிம் முனீர், இந்தியாவுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்காலத்தில் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடந்தாலும், பாகிஸ்தானின் பதில் தீவிரமாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
10:56 PM (IST) Dec 09
Aranthangi Nisha Stunning Transformation : அறந்தாங்கி நிஷா வெறும் 50 நாட்களில் தனது உடல் எடையை 14 கிலோ குறைத்து அனைவருக்கும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கொடுத்துள்ளார்.
10:52 PM (IST) Dec 09
India Thrash SA by 101 Runs in 1st T20I: பேட்டிங்கில் 59 ரன்களும், பவுலிங்கில் 1 விக்கெட்டும் வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்த ஹர்திக் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
10:16 PM (IST) Dec 09
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான வைத்திலிங்கம் நாளை விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வைத்திலிங்கம் மூலம் டெல்டாவை தட்டித்தூக்க விஜய் ரெடியாக உள்ளார்.
10:11 PM (IST) Dec 09
Good Bad Ugly A Blockbuster Hit Movie in 2025 : 2025ஆம் ஆண்டில் அஜித்துக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய குட் பேட் அக்லீ இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.
10:05 PM (IST) Dec 09
விண்வெளிப் பயணத்தின்போது நுண் ஈர்ப்பு விசை மாதவிடாயை பாதிப்பதால், விண்வெளி வீராங்கனைகளின் ஆரோக்கியம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சவாலை சமாளிக்க, மறுபயன்பாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் நடக்கின்றன.
09:37 PM (IST) Dec 09
VJ Parvathy Escaped From Bigg Boss Elimination : பிக் பாஸ் சீசன் 9ல் பாரு இந்த வார எலிமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்பதை ஸ்வீட்டை ஊட்டி விட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
09:15 PM (IST) Dec 09
Karthigai Deepam Serial 1057th Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா தனது அக்காவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
08:56 PM (IST) Dec 09
iPhone 16 ஐபோன் 16 இப்போது வெறும் ரூ.65,900 விலையில்! வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.
08:54 PM (IST) Dec 09
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் வெளுத்துக் கட்டினார். கேசவ் மகாராஜ் பந்தில் தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசிய அவர் நோர்க்யா ஓவரிலும் பவுண்டரிகளாக விரட்டினார்.
08:51 PM (IST) Dec 09
Starlink சாட்டிலைட் இன்டர்நெட் சேவைகளுக்கான 5% கட்டண உயர்வை டிராய் நிராகரித்தது. இதனால் ஸ்டார்லிங்க் விலை மற்றும் நகர்ப்புற சந்தாதாரர்களுக்கு என்ன நன்மை? விவரம் உள்ளே.
08:48 PM (IST) Dec 09
இண்டிகோ விமான சேவைகள் சமீபத்திய நெருக்கடிக்குப் பிறகு மீண்டும் சீரடைந்துள்ளதாக அதன் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் எல்பெர்ஸ் அறிவித்துள்ளார். பயணிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கு இண்டிகோ பொறுப்பேற்க வேண்டும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
08:43 PM (IST) Dec 09
Neal Mohan யூடியூப் சிஇஓ நீல் மோகனுக்கு டைம் இதழின் 2025ம் ஆண்டின் சிறந்த சிஇஓ விருது! அவரது லக்னோ கனெக்ஷன் மற்றும் வெற்றிப் பயணம் பற்றிய முழு விவரம் உள்ளே.
08:36 PM (IST) Dec 09
Poco C85 போக்கோ C85 5G இந்தியாவில் அறிமுகம்! 6000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் பெரிய டிஸ்ப்ளேவுடன் பட்ஜெட் விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.
08:25 PM (IST) Dec 09
மைக்ரோசாப்ட் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களை மேம்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளார்.
08:24 PM (IST) Dec 09
CSIR UGC NET 2025 தேர்வு மைய அறிவிப்பு வெளியானது. csirnet.nta.nic.in இணையதளத்தில் உங்கள் தேர்வு நகரத்தை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.
08:17 PM (IST) Dec 09
SSC CHSL SSC CHSL 2025 தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. ssc.gov.in தளத்தில் டவுன்லோட் செய்வது மற்றும் ஆட்சேபனை தெரிவிப்பது எப்படி? முழு விவரம்.
08:10 PM (IST) Dec 09
Data Centers AI மற்றும் டிஜிட்டல் உலகை இயக்கும் டேட்டா சென்டர்களுக்குள் என்ன இருக்கிறது? வெப்பம், மின்சாரம் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய முழு விவரங்களை இங்கே படியுங்கள்.
08:08 PM (IST) Dec 09
ஜி.கே.மணி மனிதனே இல்லை என்றும் அவர் ஏதேதோ சொல்லி தன்னையும், ராமதாஸையும் பிரித்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
08:04 PM (IST) Dec 09
5 Essential Skills தலைமைத்துவம் என்பது பிறப்பால் வருவதல்ல, அது வளர்க்கப்படுவது. உங்கள் அணியை வெற்றிகரமாக வழிநடத்த உதவும் 5 முக்கிய திறன்கள் பற்றி இங்கே படியுங்கள்.
07:56 PM (IST) Dec 09
Nivetha Pethuraj Deleted Her Engagement Photos : நடிகை நிவிதா பெத்துராஜ், ரஜித் திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. instagram பக்கத்தில் பதிவிட்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை நீக்கியுள்ள நிலையில் திருமணம் நிறுத்தப்படுள்ளதாக சொல்லப்படுகிறது.
07:35 PM (IST) Dec 09
Pandian Stores 2 Serial 658th Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 658ஆவது எபிசோடானாது ராஜீயின் காட்சியில் ஆரம்பித்து தங்கமயில் காலில் விழும் காட்சிகளுடன் முடிந்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.
07:30 PM (IST) Dec 09
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண், தனது ஆழ்ந்த பக்தியின் காரணமாக கிருஷ்ணர் சிலை ஒன்றை கிராம மக்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். பிருந்தாவனில் கிடைத்த தெய்வீக அனுபவத்தால் கிருஷ்ணரை திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.
07:05 PM (IST) Dec 09
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் தொடங்கியுள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் நிலையில், சஞ்சு சாம்சன் உள்பட 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
07:03 PM (IST) Dec 09
Latest Kollywood Box Office Updates : 2025ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் தமிழ் சினிமாவில் கள்ளாகட்டிய டாப் 3 படங்களின் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபிஸ் அப்டேட் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:53 PM (IST) Dec 09
‘‘தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் தலைமை நீதிபதி ஏன் ஈடுபடவில்லை? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி வாக்கு திருட்டு, ஆர்எஸ்எஸ்ஸை குறிவைத்து கேள்வி எழுப்பி உள்ளார்.
06:51 PM (IST) Dec 09
மனைவி உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காததால் ஏற்பட்ட தகராறு விவாகரத்தில் முடிந்துள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் தொடங்கிய இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்து கணவன் பராமரிப்பு தொகை வழங்க ஒப்புக்கொண்டதை அடுத்து விவாகரத்து.
06:42 PM (IST) Dec 09
குளிர்காலத்தில் வெண்டைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
06:38 PM (IST) Dec 09
திமுகவின் வாக்குகளையே விஜய் உடைக்கிறார். திமுக அப்படியே வெற்றி பெற்றாலும் பத்தாது. சிங்கிள் மெஜாரிட்டி பெற்று திமுக ஆட்சியில் உட்கார வேண்டும். இல்லை என்றால் அமித் ஷா விளையாடுவார். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தால் அது திமுகவுக்கு பலவீனம்.
06:29 PM (IST) Dec 09
குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
06:29 PM (IST) Dec 09
திமுக அரசு என் அரசியல் பயணத்தை முடக்கப் பார்த்தாலும், தடுக்க நினைத்தாலும் அது நடக்காது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
06:16 PM (IST) Dec 09
கர்நாடக மின்சாரப் பகிர்மானக் கழகம் (KPTCL) அவசரப் பராமரிப்புப் பணிகளால், பெங்களூருவின் பல பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
06:14 PM (IST) Dec 09
குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்தலைத் தடுக்க தினமும் இந்த ஒரு ஜூஸ் குடியுங்கள். அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
06:05 PM (IST) Dec 09
மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இந்த மாற்றம் ஆணையத்தின் சுதந்திரத்தைக் குறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
05:43 PM (IST) Dec 09
நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
05:17 PM (IST) Dec 09
தமிழ்நாட்டில் முயற்சி செய்தால் பாஜக கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஏற்கனவே டெல்லிக்கு லிஸ்ட் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸின் பங்களிப்பும் இனி தமிழக தேர்தலில் இருக்கும்.
05:11 PM (IST) Dec 09
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக தலைமைச்செயலாளர் காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
05:11 PM (IST) Dec 09
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியாவின் 6% வளர்ச்சி விகிதத்தை 8% ஆக உயர்த்துவதற்கான சவால்கள் மற்றும் கால அவகாசம் குறித்துப் பேசினார். மேலும், டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்ததற்குக் காரணத்தையும் அவர் விளக்கினார்.
05:09 PM (IST) Dec 09
அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்கள், அந்த கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் செய்யப்பட்டால், அவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிடித்தம் இன்றி முழு சம்பளம் வழங்கப்படும் என நிதித்துறை அறிவித்துள்ளது.