நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது ஜூஸ் போட்டு குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கான பதிலை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் என்பது பல மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு சூப்பர் பழம். இது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாக கருதப்படும் இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கிறது. இப்போது விஷயம் என்னவென்றால் நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவது நல்லதா? அல்லது அதை ஜூஸ் ஆக குடிப்பது நல்லதா? இது குறித்த சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான விளக்கத்தை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள் :
1. நோய் எதிர்ப்பு சக்தி...
நெல்லிக்காய் பாலிபினால்களின் நல்ல மூலமாக்கும். இது செரிமானத்தை மேம்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. நெல்லிக்காயை வெறுமனே சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி செயல்பாட்டை மேம்படுத்தும். இதனால் வைரஸ்கள் பாக்டீரியாக்கள் வருவது தடுக்கப்படும்.
2. எலும்புகளை வலுவாக்கும்...
நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டால் அதில் இருக்கும் கால்சியம் எலும்புகள் பற்களை வலுப்படுத்த பெரிதும் உதவும். எனவே, மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்ட அனுப்புனர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் நெல்லிக்காய் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது தசை வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது.
3. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த...
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் உணர்திறன் அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் சரியான உறிஞ்சுதலை உறுதி செய்யும். இதனால் சர்க்கரை நோயை சுலபமாக நிர்வகிக்க முடியும். அதுபோல நெல்லிக்காயில் இருக்கும் பாலிப்பினார்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.
4. இரத்தத்தை சுத்திகரித்தல்...
பச்சை நெல்லிக்காயில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகின்றது மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் அனைத்து உறுப்புகளுக்கும், முக்கிய ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் நன்மைகள் :
1. எடையை குறைக்க...
நெல்லிக்காய் ஜூஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதிக கலோரிகளில் எரிக்கவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் மற்றும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
2. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த...
நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேறிகள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் அவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். இதனால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்.
3. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த...
நெல்லிக்காய் ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கவும், அதை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இதில் நிறைந்திருக்கும் ஆக்சிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும்.
4. சருமம் மற்றும் கூந்தலுக்கு...
நெல்லிக்காய் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுக்கள், கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இதன் விளைவாக சருமத்தில் பருக்கள், தழும்புகள் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும். இது தவிர, இது பொடுகை நீக்கவும், முடி உதிர்வதை தடுக்கவும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் போன்ற கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் நன்மை பயக்கும். மேலும் இது முடியை பளபளப்பாகவும், வலுவாகவும், அடர்த்தியாகவும் மாற்றுகிறது.
5. கண்களுக்கு நல்லது...
நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளதால் அவை கண் பார்வையை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே உங்கள் கண் ஆரோக்கியமாக இருக்க நெல்லிக்காய் சாறு குடியுங்கள்.
6. பெண்களுக்கு நல்லது...
நெல்லிக்காய் ஜூஸ் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும், கருவுறுதலை அதிகரிக்கவும் உதவுகிறது. குறிப்பாக PCOS, PCOD போன்ற பிரச்சனைகள் பாதிக்க பட்ட பெண்களுக்கு இது அருமருந்தாகும்.
எது நல்லது?
நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் இவை இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் சிலர் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க கூடாது. யாரெல்லாம் தெரியுமா?
- உங்களுக்கு ஏற்கனவே சளி, இருமல் போன்ற பிரச்சனை இருக்கும்போது நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் பிரச்சனையே மேலும் மோசமாகிவிடும்.
- அமிலத்தன்மை பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் நெஞ்செரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்தி விடும்.
- உங்களுக்கு ஏற்கனவே ரத்தம் தொடர்பான நோய் இருந்தால் நீங்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டாம்.
- குறைந்த இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் இரத்த சர்க்கரை அளவை மேலும் குறைத்து விடும்.


