MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Amla for Kids : குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுக்குறதுல இவ்ளோ இருக்கா? பெற்றோரே! இது தெரியாம கொடுக்காதீங்க!

Amla for Kids : குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுக்குறதுல இவ்ளோ இருக்கா? பெற்றோரே! இது தெரியாம கொடுக்காதீங்க!

வளரும் குழந்தைகளுக்கு தினமும் நெல்லிக்காய் கொடுப்பதால் கிடைக்கும் அருகில் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Sep 18 2025, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Amla for Kids
Image Credit : unsplash

Amla for Kids

வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுப்பது பெற்றோரின் கடமை. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தையின் உணவில் ஏதாவது ஒரு வகையில் நெல்லிக்காய் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ஏனெனில் 100 கிராம் நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி-யானது சுமார் 20 ஆரஞ்சு பழத்திற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் குழந்தைகள் நெல்லிக்காய் புளிப்பாக இருப்பதால் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே, பிற உணவுகளுடன் அதை சேர்க்கும்போது சுவையாகவும் இருக்கும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி இப்போது வளரும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

27
இரும்புச்சத்து
Image Credit : Asianet News

இரும்புச்சத்து

வைட்டமின் சி தான் உணவில் இருந்து போதுமான இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது. இரும்புச்சத்து குறைபாடு இல்லை என்றால் ஹீமோகுளோபின் அளவும் மேம்படும். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் நெல்லிக்காயை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாது.

Related Articles

Related image1
amla eating rules தப்பித் தவறிக் கூட நெல்லிக்காயுடன் சேர்த்து இதை சாப்பிடக் கூடாது
Related image2
Hair loss prevention Amla: எலி வால் போல் இருக்கும் முடியை...அசுரவேகத்தில் வளர வைக்க 3 நெல்லிக்காய் போதும்..!
37
செரிமான பிரச்சனை
Image Credit : our own

செரிமான பிரச்சனை

தற்போது குழந்தைகளும் செரிமான பிரச்சனைகள் அவதிப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வயிற்று உப்புசம், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சினைகளும் வளரும் பிள்ளைகளிடம் இருக்கிறது. நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்தையும் ஊக்குவிக்கும். ஆக மொத்தம் வயிற்றை சுத்தம் செய்ய நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

47
நோய் எதிர்ப்பு சக்தி
Image Credit : Getty

நோய் எதிர்ப்பு சக்தி

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், தொற்று நோய்களை எதிர்த்து போராடவும் நெல்லிக்காய் உதவுகிறது. எனவே, குழந்தைகளின் உணவில் தினமும் நெல்லிக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள்.

57
பசி தூண்டப்படும்
Image Credit : stockPhoto

பசி தூண்டப்படும்

பொதுவாக குழந்தைகளுக்கு எப்போதுமே பசி எடுக்காது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் குழந்தைகளுக்கு நெல்லிக்காய் கொடுப்பதன் மூலம் அவர்களது பசி தூண்டப்படும், ஆரோக்கியமான எடையும் அதிகரிக்கும்.

67
கண்ணுக்கு நன்மை
Image Credit : stockPhoto

கண்ணுக்கு நன்மை

நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஏ குழந்தைகளின் கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் சி கண்ணை பாதிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சேர்ப்பதன் மூலம் அவர்களது கண் பார்வை கூர்மையாகும்.

77
ஞாபக சக்தி
Image Credit : Getty

ஞாபக சக்தி

நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின், ஆன்டிஆக்சிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் டிமென்ஷியா பிரச்சனை உள்ளவர்களின் மூளை செயல்பாட்டை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. எனவே பலரும் உங்கள் குழந்தையின் மூளை கம்ப்யூட்டர் வேகத்தில் செயல்பட அவர்களது உணவில் நெல்லிக்காய் சேர்க்கலாம்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
பெற்றோர் ஆலோசனை
குழந்தைகள் நல பராமரிப்பு குறிப்புகள்
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
குழந்தைகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved