Summer Foods: வெயில் சுட்டெரிக்குதா? உடம்பை கூல் ஆக்க இந்த உணவுகள் போதும்!
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் வெயில் கொளுத்தும்போது, உடம்பும் சோர்வாகவும் சூடாகவும் இருக்கும். இந்த நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு அதிகம். உடல் சூட்டை இயற்கையாகக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.
15

Image Credit : Getty
புதினா
புதினா கலந்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். அதுமட்டுமல்லாமல், வயிறு உப்பசத்தைத் தடுத்து, செரிமானத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது.
25
Image Credit : Getty
தர்பூசணி
வெயில் காலத்தில் தர்பூசணி சாப்பிடுவது உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவும். இதில் நீர்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதையும் இது தடுக்கிறது.
35
Image Credit : Getty
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் நாம் அடிக்கடி சாப்பிடும் ஒரு காய். இதில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவும்.
45
Image Credit : our own
தயிர்
தயிரில் உடலுக்கு நன்மை செய்யும் புரோபயாடிக்ஸ் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நல்ல செரிமானத்தையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் தருகிறது.
55
Image Credit : Getty
இளநீர்
இளநீரில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. வெயில் நேரத்தில் இளநீர் குடிப்பது, உங்கள் உடலை எப்போதும் நீர்ச்சத்துடன் (hydrated) வைத்திருக்க உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.
Latest Videos

