Food: இந்த 4 முளைத்த காய்கறிகளை சாப்பிட்டு விடாதீர்கள்.! உயிருக்கே கூட உலை வைக்குமாம்.!
சில முளைத்த காய்கறிகளை சாப்பிடுவது ஆபத்தானது. அவை இயற்கையாகவே நச்சுத்தன்மை உள்ள சேர்மங்களை கொண்டிருப்பதால், அவற்றை சாப்பிடுவதை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தவிர்க்க வேண்டிய 4 முளைத்த காய்கறிகள்
முளைகட்டிய உணவுப் பொருட்கள் ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், செரிமானத்திற்கு உதவும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்சைம்கள் நிறைந்துள்ளன. கலோரிகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும இருப்பதால் எடை மேலாண்மை மற்றும் தசை பழுது பார்ப்பிற்கு இவை முளைகட்டிய உணவுப்பொருட்கள் உதவுகின்றன. முளைப்பது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகப்படுத்துவதால் இவை சூப்பர் புட் என அழைக்கப்படுகிறது. ஆனால் அனைத்து முளைகட்டிய உணவுகளும் பாதுகாப்பானவை அல்ல. சில முளைத்த காய்கறிகள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இவை நச்சுத்தன்மையுடைய சேர்மங்களை கொண்டிருக்கலாம். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி கட்டாயம் தவிர்க்க வேண்டிய 4 முளைத்த காய்கறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முளைக்கட்டிய உருளைக்கிழங்கு
முளைக்கட்டிய உருளைக்கிழங்கில் சோலனைன் என்கிற நச்சுப் பொருள் உள்ளது. இது இயற்கையாகவே உருளைக்கிழங்கில் இருக்கும் ஒரு பாதுகாப்பு வேதிப்பொருளாகும். உருளைக்கிழங்கு முளைக்கும் பொழுது அல்லது நீண்ட நேரம் வெயிலில் இருக்கும் பொழுது அதன் மேல் நிறம் பச்சை நிறமாக மாறுகிறது. இந்த பச்சை நிறப் பகுதிகளும், முளைத்த இடங்களிலும் சோலனைன் அதிகமாக இருக்கும். சோலனைன் அதிக அளவு உட்கொள்ளும் பொழுது வாந்தி, வயிற்றுப்போக்கு, குமட்டல், தலைவலி, நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட தீவிர உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதை அறவே கைவிட வேண்டும். பச்சை நிறப் பகுதிகள் அதிகம் இருக்கும் உருளைக்கிழங்குகளை வாங்குதல் கூடாது. பச்சை பகுதிகள் இருந்தால் அந்த பகுதிகளை அகற்றி தோலை நன்றாக உறித்து விட்டு நன்கு சமைத்த பிறகு சாப்பிடலாம். ஆனால் உருளைக்கிழங்கு முழுவதும் பச்சையாக மாறி இருந்தால் அதை முழுமையாக தவிர்ப்பது நல்லது.
முளைக்கட்டிய வெங்காயம்
முளைத்த வெங்காயத்தில் அதிக அளவு ஆல்கலாய்டுகள் உள்ளது. குறிப்பாக N-புரோபில் டைசல்பைடு இரத்த சிவப்பணுக்களை சேதப்படுத்தி ஹுமோலிட்டிக் ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. முளைத்த வெங்காயத்தை அதிக அளவு உட்கொண்டால் குமட்டல், வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுக்கும் வழிவகுக்கும். முளைக்கும் செயல்முறை சர்க்கரைகள் மற்றும் ஸ்டார்ச்சுகளை உடைத்து வெங்காயத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் ஆக்குகிறது. இதன் காரணமாக வெங்காயம் விரைவில் அழுகிவிடும் அல்லது பூஞ்சைகள் உருவாக கூடும். வெங்காயம் முளைக்க ஆரம்பிக்கும் பொழுது அதில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஊட்டச்சத்துகளை பயன்படுத்தியே முளைவிடத் தொடங்கும். இதனால் அவற்றின் சுவை, ஊட்டச்சத்து குறைந்து கசப்பான சுவை கொண்டதாக மாறும். எனவே முளைத்த வெங்காயத்தை சாப்பிடக்கூடாது.
முளைத்த பூண்டு மற்றும் வேர்க்கடலை
வெங்காயத்தைப் போலவே முளைவிட்ட பூண்டிலும் அதிக அளவு சல்பர் சேர்மங்கள் உள்ளன. அவை இரைப்பைக் கோளாறு மற்றும் ரத்த சிவப்பணுக்களுக்கு ஆக்ஸிஜனேற்ற சேதங்களை ஏற்படுத்தலாம். முளைவிட்ட பூண்டுகள் ரப்பர் தன்மையுடன் குறைவான நறுமணத்தையும், குறைந்த செயல் திறனையும் கொண்டிருக்கும். பூண்டுகள் மென்மையாகவோ அல்லது நிறமாற்றம் அடைந்ததாகவோ இருந்தால் அது கெட்டுப் போன அல்லது பூஞ்சை வளர்ந்த பூண்டாக இருக்கலாம். எனவே முளைவிட்ட பூண்டுகளை சாப்பிடுவதையும் கைவிட வேண்டும். அதேபோல் முளைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லதல்ல. முளைத்த வேர்க்கடலையில் அஃப்லாடாக்சின் என்கிற பூஞ்சை நச்சு பொருள் உருவாக வாய்ப்பு உள்ளது. இது ஒரு தீவிரமான நச்சுப் பொருளாகும். இதை அதிக அளவு உட்கொள்ளும் பொழுது கல்லீரல் பாதிப்பு புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவையும் ஏற்படலாம். வேர்க்கடலை முளை விடத் தொடங்கியிருந்தால் அதை முழுமையாக தவிர்ப்பது நல்லது. சமைத்து சாப்பிட்டாலும் இந்த நச்சு பொருள் முழுமையாக நீங்காது.
நேரடி மரணங்கள் ஏற்படுத்துவதில்லை
முளைகட்டிய காய்கறிகள் ஊட்டச்சத்து நன்மைகளை வழங்கினாலும் அதில் உருவாகும் இயற்கை நச்சுக்கள் மற்றும் பூஞ்சைகள் காரணமாக அபாயங்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் இந்த காய்கறிகளை பச்சையாக உட்கொள்ளும் பொழுது அல்பால்ஃபா, சால்மோனெல்லா ஈகோலை போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை கொண்டிருக்கலாம். இவை நேரடியாக மரணத்தை ஏற்படுத்தாது என்ற போதிலும் இந்த பாக்டீரியாக்கள் உடலில் ஏற்படுத்தும் கடுமையான சேதங்கள் காரணமாக மரணத்தின் ஆபத்து அதிகரிக்கலாம். எனவே முளைவிட்ட காய்கறிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காய்கறிகளை புதிதாக வாங்கி வந்து நன்றாக கழுவி, அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.