சில உணவுகளை சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அஜீரண பிரச்சனை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அவை என்னென்ன உணவுகள் என்று இங்கு பார்க்கலாம்.

நம் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் மற்றும் உணவு இவை இரண்டுமே ரொம்பவே முக்கியம். ஆனால் சாப்பிடும்போது 'பேசாதே, தண்ணீர் குடிக்காதே' என்று நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் பெரும்பாலானோர் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சொல்லப்படுகிறது.

அதிலும் குறிப்பாக சில உணவுகளை சாப்பிடும் போது ஒருபோதும் தண்ணீர் குடிக்கவே கூடாது என்று கூறப்படுகிறது. அப்படி குடித்தால் அது நம்முடைய ஆரோக்கியத்திற்கு தான் தீங்கு விளைவிக்குமாம். அதன் விளைவாக அஜீரணம், செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கவே கூடாது என்பதை பற்றி பார்க்கலாம்.

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாத சில உணவுகள் :

1. காரமான உணவுகள்

பொதுவாக கார உணவுகள் சாப்பிடும் போது அது நம்முடைய வாய் மற்றும் உணவுக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் குடித்தால் எரிச்சல் மேலும் அதிகரிக்கும். அதன் விளைவாக வயிற்றுப் புண், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

2. கொழுப்பு நிறைந்த உணவுகள்

பரோட்டா பிரியாணி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகள் ஏற்கனவே மெதுவாக தான் ஜீரணிக்கும். ஆகவே இவற்றை சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்டு முடித்த உடனே தண்ணீர் குடித்தால் வாயு பிரச்சனை, வயிற்றுப்புண் போன்றவற்றை ஏற்படுத்தும்.

3. பால்

பால் குடித்த உடனே தண்ணீர் குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும். இதன் காரணமாக வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.

4. சூப்

சூப் தண்ணீரில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆகவே சூப் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் அதிக திரவம் சேர்ந்து செரிமானத்தை மெதுவாகி வாயு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்.

5. பழச்சாறுகள்

பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாகவே இருக்கும். எனவே பழச்சாறு குடித்த பிறகு தண்ணீர் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனே அதிகரித்து விடும்.

6. கார்பனேட்டட் பானங்கள்

கார்பனேட் பானங்களில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு வாயு வீக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே எந்தவொரு உணவு சாப்பிட்ட பிறகும் கார்பனேட்டட் பானங்கள் குடிப்பதை தவிர்ப்பது நல்லது. அதுபோல இந்த பானங்களை குறித்த பிறகு தண்ணீர் ஒருபோதும் குடிக்க கூடாது.

7. சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. மீறி குடித்தால் வயிற்றில் அசெளகரிய உணர்வு ஏற்படும்.

8. தயிர்

தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்றாலும் தயிர் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் அது நன்மைக்கு பதிலாக தீங்கை தான் விளைவிக்கும். வேண்டுமானால் தயிருடன் தண்ணீர் கலந்து கூட குடிக்கலாம். ஆனால் ஒருபோதும் தயிரையும் தண்ணீரையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

9. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் அதை சாப்பிடும் போது தண்ணீர் அதிகமாக குடித்தால், அதில் இருக்கும் நார்ச்சத்தானது நீர்த்துப் போய்விடும். இதனால் செரிமான பிரச்சனைகள் தான் ஏற்படும்.

10. சாதம்

அரிசி சாதம் சாப்பிடும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் செரிமானத்திற்கு தேவையான வயிற்று அமலங்களானது நீர்த்துப் போகும். எனவே சோறு சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது தவிர்ப்பது நல்லது.

மேலே சொல்லப்பட்டுள்ள உணவுகளை சாப்பிட்டதும் நீங்கள் தண்ணீர் அருந்தினால் அதனால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்வது நல்லது.