- Home
- Cinema
- ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
Good Bad Ugly A Blockbuster Hit Movie in 2025 : 2025ஆம் ஆண்டில் அஜித்துக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய குட் பேட் அக்லீ இந்த ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

அஜித்தின் குட் பேட் அட்லி
2025 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளியான அனைத்து படங்களிலும் இந்த ஆண்டில் மிக வெற்றி படமாக அதிக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் இரண்டாவது இடத்தை பெற்றது அஜீத் நடித்த குட் பேட் அட்லி திரைப்படம். அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றது, அதன் வாழ்நாளில் உலகளவில் சுமார் ரூ.238.50 கோடி வசூலித்தது. சில கலவையான விமர்சனங்கள் மற்றும் பட்ஜெட் கவலைகள் இருந்தபோதிலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
Good Bad Ugly Movie
ஆனால் இறுதியில் உலகளவில் ரூ.250 கோடிக்குக் கீழே முடிந்தது. இந்தப் படம் மிகப்பெரிய ஓபனிங்கைப் பெற்றது, அஜித்தின் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, மேலும் அதன் மூன்றாவது வாரத்தில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்த போதிலும், தமிழ்நாட்டில் விதிவிலக்காக சிறப்பாக ஓடியது. அவரது முந்தைய படங்களான 'துணிவு' மற்றும் 'விஸ்வாசம்' போன்ற சாதனைகளை முறியடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர்:
ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தின் இயக்குனர். ஒரு அதிரடி கலந்த நகைச்சுவை திரைப்படமாக இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்பட்டது. அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
அஜித் குமார்:
ரசிகர்களிடம் அஜித் படம் என்றாலே பெரும் பரபரப்பும் ஆர்வமும் ஏற்படும் தனக்கென தனி இடத்தை பெற்றவர் தலை இந்த நாடை தமிழ்நாடு என்பதைவிட தல நாடு என்பதை சிலர் கூறி வருகின்றனர் அதேபோல் தலை படம் எந்த படம் வந்தாலும் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பது ரசிகர்களிடம் பெரும் பேச்சை பெற்று உள்ளது. தல படம் எப்படி இருந்தாலும் அது ஓடி பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று விடும். அஜித் குமாருக்கு தமிழ்நாட்டில் பொருத்தவரையில் மிக அதிகமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.
தயாரிப்பு:
Good Bad Ugly' தமிழ்த் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர்:
குட் பேடு அட்லி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித் குமாரின் விடாமுயர்ச்சி திரைப்படம் அதன் மொத்த பட்ஜெட்டில் பாதியைக் கூட ஈட்டத் தவறிய நிலையில் அடுத்து வந்த குட் பேட் அக்லீ அஜித்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.