MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேலின் திருமணத்தை தடுத்து நிறுத்தியது காந்திமதி தான் என்கிற உண்மை அறிந்த சக்திவேல் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 28 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial Today Episode
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial Today Episode

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேலுக்கு பெண் பார்த்து நிச்சயதார்த்தம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை வீட்டில் உள்ள அனைவரும் செய்து வந்த நிலையில், காந்திமதி, தன்னுடைய பேரனுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாததை அறிந்து, பெண் வீட்டாரை கோவிலுக்கு வரச் சொல்லி குமரவேலுக்கு ஏற்கனவே அரசியுடன் திருமணம் ஆன விஷயத்தை சொல்லிவிட, பெண் வீட்டார் நிச்சயதார்த்தத்தை நிறுத்துவிடுகிறார்கள். இதன்பின்னர் சக்திவேல் பெண் வீட்டாரை அழைத்து உங்களுக்கு இந்த விஷயத்தை சொன்னது யார் என கேட்க, அவரும், காந்திமதி சொன்னதாக சொல்லிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
திட்டு வாங்கும் காந்திமதி
Image Credit : jiohotstar

திட்டு வாங்கும் காந்திமதி

நம்ம அம்மா தான் பெண் வீட்டாரிடம் எல்லாத்தையும் சொல்லி நிச்சயதார்த்தத்தை நிறுத்தி இருக்கிறார் என்கிறா உண்மை சக்திவேலுக்கு தெரியவந்ததை அடுத்து, வீட்டிற்கு பயங்கர கோபத்துடன் வந்த சக்திவேல், தன்னுடைய அம்மாவை கூப்பிட்டு செம திட்டு திட்டுகிறார். அதுமட்டுமின்றி உனக்கு இதுக்கப்புறம் இந்த வீட்ல இடம் இல்லை. இப்பவே நீ இந்த வீட்டை விட்டு வெளிய போ என சொல்கிறார். அப்போது அங்கிருந்த பழனி, அம்மாவை எப்படி வீட்டை விட்டு வெளியே போக சொல்ல முடியும். இந்த வீட்டில் அவங்களுக்கும் பங்கு இருக்கு என சப்போர்ட் பண்ணுகிறார்.

Related Articles

Related image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Related image2
கர்ப்பமான தங்கமயில்... சரவணனுக்கு காத்திருக்கும் பேரிடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடி திருப்பம்
35
அம்மாவை வெளியே துரத்திய சக்திவேல்
Image Credit : jiohotstar

அம்மாவை வெளியே துரத்திய சக்திவேல்

அதற்கு பதிலளிக்கும் சக்திவேல், இது என் அப்பாவோட சொத்து, இதில் அம்மாவுக்கு இடமில்லை. நம்ம 3 பேருக்கு தான் பங்கு இருக்கு என சொல்லி, காந்திமதியின் கையை பிடித்து தரதரவென வெளியே இழுத்து வந்து விடுகிறார். அப்போது சத்தம் கேட்டு, கோமதியும் அவரது வீட்டாரும் வெளியே வந்து பார்க்கிறார்கள். அப்போது காந்திமதியை சக்திவேல் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடையும் கோமதி, அம்மாவை ஏன் இப்படி பண்ணுறீங்க என தட்டிக் கேட்கிறார். அந்த நேரத்தில் பாண்டியனும் அங்கு வருகிறார். அவருக்கு என்ன நடக்கிறது என்பது சுத்தமாக புரியவில்லை.

45
அம்மாவை வீட்டுக்கு அழைத்து சென்ற கோமதி
Image Credit : jiohotstar

அம்மாவை வீட்டுக்கு அழைத்து சென்ற கோமதி

அதன்பின்னர் சக்திவேல் எல்லா கதையையும் சொல்கிறார். அதன்மூலம் தான் குமாரின் நிச்சயதார்த்தத்தை நிறுத்தியதே காந்திமதி தான் என்கிற உண்மை தெரியவருகிறது. இதையடுத்து தன்னுடைய அம்மாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்கிறார் கோமதி. அவங்க வெளிய அனுப்புனா என்ன நான் உங்களை பாத்துக்குறேன். காலம் முழுக்க உங்களுக்கு நான் சமைச்சு போடுறேன் என சொல்லி வீட்டுக்குள் அழைத்து செல்கிறார். தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் காந்திமதியை வீட்டுக்குள் அழைத்து சென்றதால் கோமதி மீது வருத்தப்படுகிறார் பாண்டியன்.

55
ஃபீல் பண்ணும் பாண்டியன்
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் பாண்டியன்

என் கிட்ட ஒரு வார்த்தை கூட உங்க அம்மா கேட்கலையேனு கடையில் இருக்கும் போது சரவணனிடம் சொல்லி ஃபீல் பண்ணுகிறார் பாண்டியன். வீட்டிற்கு வந்த காந்திமதியை சோஃபாவில் உட்கார வைத்து அவருக்கு பலகாரம், கொடுத்துவிட்டு, நீயே எதுக்கு குமாரின் நிச்சயதார்த்தத்தை நிப்பாட்டுன என கோமதி கேட்க, அதற்கு காந்திமதி, அரசிக்காக தான் நிச்சயதார்த்தத்தை நிறுத்துனேன் என்கிற உண்மையான காரணத்தை சொல்லாமல், சப்பைக்கட்டு கட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image2
கார்த்திகை தீபம் இன்றைய கூத்து: லாஜிக் மீறிய புதையல் வேட்டை! சந்திரகலா விரித்த வலையில் சிக்குவது யார்?
Recommended image3
லாஜிக் இல்லா மேஜிக் – புதையலை வைத்து டிராமா போட்ட இயக்குநர் – சந்திரகலாவின் டபுள் மாஸ்டர் பிளான் – கார்த்திகை தீபம்!
Related Stories
Recommended image1
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
கர்ப்பமான தங்கமயில்... சரவணனுக்கு காத்திருக்கும் பேரிடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடி திருப்பம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved