- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கர்ப்பமான தங்கமயில்... சரவணனுக்கு காத்திருக்கும் பேரிடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடி திருப்பம்
கர்ப்பமான தங்கமயில்... சரவணனுக்கு காத்திருக்கும் பேரிடி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அதிரடி திருப்பம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா தான் முதலில் கர்ப்பமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கமயில் கர்ப்பமாகி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேலுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், காந்திமதி பெண் வீட்டாரை ரகசியமாக அழைத்து, குமரவேலுக்கு ஏற்கனவே அரசி உடன் திருமணம் ஆகிவிட்டதாக கூற, பெண் வீட்டாரும் நிச்சயதார்த்தத்தை உடனடியாக நிறுத்தி இருக்கிறார்கள். மறுபுறம் தங்கமயிலுக்கு மீனா வேலை வாங்கிக் கொடுத்திருந்த நிலையில், அவருக்கு அந்த வீட்டிலேயே சமையல் வேலையும் கிடைத்துள்ளது. தற்போது மாதம் 17 ஆயிரம் சம்பாதிப்பதாக கூறி சந்தோஷப்படுகிறார் தங்கமயில். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
விசாரிக்கும் சக்திவேல்
இன்றைய எபிசோடில் மீனா, கோமதியை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் கோமதி, பாண்டியனை கண்டுக்காதது போல் தன்னுடைய டிராமாவை அரங்கேற்றி வருகிறார். இதையெல்லாம் நோட் பண்ணிய மீனா, நீங்க இப்படியே பண்ணுங்க கூடிய சீக்கிரத்துல உங்க புருஷன் உங்க வழிக்கு வந்திருவாரு என கூறுகிறார். மறுபுறம் குமரவேல் கல்யாணத்தை தடுத்து நிறுத்தியது யார் என்பதை தெரிந்துகொள்ள முனைப்பு காட்டும் சக்திவேல், பொண்ணுடைய அப்பாவை அழைத்து கோவிலில் பேசுகிறார். அப்போது அவரிடம் உங்களுக்கு குமரவேல் பற்றி சொன்னது யார் என கேட்கிறார்.
உடையும் உண்மை
அதுமட்டுமின்றி அந்த அரசி, அவ கழுத்துல அவளே தாலியை கட்டிக்கிட்டு வந்து என் பையன் கட்டுனதா சொன்னா, அதுதான் எல்லாருக்குமே தெரியுமே என சக்திவேல் சொல்ல, அதற்கு அந்த பெண்ணின் அப்பா, உங்க குடும்பத்துலயே ஒருத்தவங்க தான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னாங்க என கூறுகிறார். யார் உங்களிடம் அப்படி சொன்னது என சக்திவேல் கேட்க, ஆரம்பத்தில் அவர் அதெல்லாம் சொல்ல மாட்டேன் என மறுக்கிறார். பின்னர் விடாப்பிடியாக சக்திவேல் கேட்டதும், உங்க அம்மா தான் இந்த நிச்சயதார்த்ததை நிறுத்து சொன்னாங்க என்கிற உண்மையை சொல்லிவிடுகிறார். இதைக்கேட்ட சக்திவேல் கடும் கோபமடைகிறார்.
வாந்தி எடுத்த தங்கமயில்
இதன் பின்னர் தங்கமயிலை காட்டுகிறார்கள். அவர் மீனாவின் தோழி வீட்டில் ஒரு வயதானவரை கவனித்துக் கொள்கிறார். அப்போது அந்த அம்மாவிடம் இருந்து போன் வாங்கி அதிலிருந்து சரவணனுக்கு போன் போட்டு பேசுகிறார். தங்கமயிலின் வாய்ஸை கேட்ட உடனே போனை கட் பண்ணிவிடுகிறார் சரவணன். இதையடுத்து தங்கமயிலுக்கு லைட்டாக தலை சுத்துகிறது. அப்போது திடீரென வாந்தி எடுக்கிறார். அநேகமாக தங்கமயில் கர்ப்பமாக இருக்க வாய்ப்பு உள்ளது. அதை ரிவீல் பண்ணாமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். அது தெரிந்தால் சரவணன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காந்திமதிக்கு சிக்கல்
மறுபுறம் பழனியிடம் பேசும் குமரவேல், அரசி தான் தன் மனசில் இருப்பதாக கூறுகிறார். நீ உண்மையை தான் சொல்றியா, முதலில் நீ அந்த வீட்டுல இருப்பவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். பழிவாங்குவதற்காக ஏதாச்சும் பண்ணுனா நானே உன்னைய சும்மா விடமாட்டேன் என கூறுகிறார். அந்த நேரத்தில் சக்திவேல் பயங்கர கோபத்தோடு வீட்டுக்குள் எண்ட்ரி கொடுக்கிறார். எங்க அந்த கிழவி என அம்மாவை கூப்பிட்டு செம திட்டு திட்டுகிறார். நீ தான் பொண்ணு வீட்டுல பேசி நிச்சயதார்த்தத்தை நிறுத்திருக்க என சக்திவேல் சொன்னதும் அனைவரும் ஷாக் ஆகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

