- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
தங்கமயில் இருக்கும் நேரம் பார்த்து அஞ்சலியோடு கோவிலுக்கு வந்த சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எதிர்பாரா ட்விஸ்ட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனும் அஞ்சலியும் ஜோடியாக கோவிலுக்கு வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் மீனா. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Pandian Stores 2 Serial Today Episode
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் தோழி வீட்டில் வேலைக்கு சேர்ந்த தங்கமயில், அங்கு கூடுதலாக சமையல் வேலையையும் பார்க்க ஆரம்பித்துள்ளதால் அவருக்கு மீனாவின் தோழி, சம்பளத்தை ஏத்திக் கொடுத்திருக்கிறார். மாதம் 17 ஆயிரம் சம்பளம் தருவதாக சொன்னதால் குஷியான தங்கமயில், அந்த சந்தோஷமான தகவலை மீனாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்கிறார். அதுமட்டுமின்றி உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று தங்கமயில் சொல்ல, மீனா அவரை கோவிலுக்கு வரச் சொல்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
கோமதி செய்த அட்ராசிட்டி
பாண்டியன் மற்றும் கோமதியின் அட்ராசிட்டியோடு தான் இன்றைய எபிசோடு ஆரம்பித்துள்ளது. கோமதி பல திட்டங்களோடு வீட்டில் அமர்ந்திருக்க, அந்த நேரம் பார்த்து அங்கு வரும் பாண்டியன், தண்ணி வேணும் என கேட்கிறார். அதற்கு அவர், என் பேரு தண்ணி இல்ல, கோமதி என நக்கலாக பதிலளிக்கிறார். இதையடுத்து பாண்டியன், கோமதி என்று பெயர் சொல்லி கூப்பிடாமல், தண்ணி தண்ணி என கூறுகிறார். உடனே எழுந்து செல்கிறார் கோமதி, சரி நமக்கு தண்ணி எடுக்க தான் போறா என பாண்டியன் நினைக்க, கோமதியோ டைனிங் டேபிள் அருகே சென்று, அங்கிருந்த தண்ணீர் கேன் அருகே சென்று, ஏய் தண்ணி இந்த வீட்டோட தலைவர் உன்னைய கூப்பிடுகிறார் எழுந்து போ என சொல்லி பாண்டியனை நோஸ்கட் பண்ணுகிறார்.
பாண்டியனின் பரிதாப நிலை
இதைப்பார்த்து கடுப்பான பாண்டியன், விறுவிறுவென கிளம்பி ரூமுக்கு செல்கிறார். பின்னர் சிறிது நேரம் கழித்து பாண்டியனுக்கு பசி எடுக்கிறது. அவர் தனியாக வந்து சாப்பிட உட்கார்கிறார். அப்போது பரிமாறக் கூட கோமதி வரவில்லை. இதனால் வேறு வழியின்றி பாண்டியன், கோபத்தோடு, அங்கிருந்த சாப்பாட்டை தானே எடுத்து வைத்துக் கொள்கிறார். அப்போது பரிமாறத் தெரியாமல் சாப்பாடை மேலையும், கிழையும் சிந்துகிறார். இதையெல்லாம் கோமதி கண்டுகொள்ளாமல் ரூமுக்குள்ளேயே இருக்கிறார். அதன்பின்னர் பாண்டியன் ஒருவழியாக சாப்பிட்டு முடித்துவிட்டு கடைக்கு கிளம்புகிறார்.
தங்கமயிலை சந்திக்கும் மீனா
மறுபுறம் தங்கமயில், மீனாவை கோவிலில் சந்திக்கிறார். அங்கு இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனாவிடம் எனக்கு இனிமே 17 ஆயிரம் சம்பளம் என சொல்லி சந்தோஷப்படுகிறார் தங்கமயில். அதேபோல் சரவணன் கடையில் இருக்கும் போது அவருக்கு அஞ்சலியிடம் இருந்து போன் வருகிறது. அவர் சரவணனை கோவிலுக்கு போகலாம் வா என அழைக்கிறார். அப்படியா இந்த உடனே வருகிறேன் என சொல்லி போனை வைக்கிறார். அதன்பின்னர் கடையில் இருந்த தன்னுடைய அப்பா பாண்டியனிடம் பொய் சொல்லிவிட்டு அஞ்சலியை பார்க்க கிளம்பிச் செல்கிறார் சரவணன்.
மீனாவுக்கு வந்த சந்தேகம்
சரவணனும் அஞ்சலியும் ஜோடியாக கோவிலுக்குள் செல்கிறார்கள். அந்த கோவிலில் தான் தங்கமயிலும், மீனாவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணனையும் அஞ்சலியையும் மீனா பார்த்துவிடுகிறார். இவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ நடக்குது என சந்தேகப்படும் மீனா, தங்கமயில் அவர்களை பார்த்துவிடக் கூடாது என்பதால், மயிலை அழைத்துக் கொண்டு அவசர அவசரமாக கோவிலை விட்டு கிளம்புகிறார் மீனா. தங்கமயிலும் அவர்கள் இருவரையும் பார்க்கவில்லை. இதையடுத்து என்ன பிரச்சனை வெடிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

