MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவின் பேச்சைக் கேட்டு பாண்டியனிடம் பேசாமல் அவரை சீண்டிப் பார்க்கிறார் கோமதி. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை இங்கே காணலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2026, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கோமதியிடம் பேசாமல் இருக்கும் பாண்டியனை அவர் பாணியிலேயே பழிவாங்க திட்டமிட்டிருக்கிறார் கோமதி. அதற்கு முதல் படியாக அவர் எது சொன்னாலும் கேட்காதது போல் இருந்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதேபோல் பாண்டியன் சாப்பிட உட்கார்ந்த போது, அவரைத் தவிர்த்து எல்லாருக்கும் பரிமாறிவிட்டு கோமதி நிற்க, அதனால் கடுப்பான பாண்டியன் சாப்பிடாமலே எழுந்து சென்றுள்ளார். கோமதிக்கு இந்த பிளானை எல்லாம் போட்டுக்கொடுத்தது மீனா தான். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மீனாவை எச்சரிக்கும் செந்தில்
Image Credit : jiohotstar

மீனாவை எச்சரிக்கும் செந்தில்

கோமதிக்கு போன் பண்ணி பேசும் மீனா, உங்க புருஷன் இப்படி பண்ணுகிறார் என இறக்கப்பட்டு நீங்கள் வளைஞ்சிகொடுத்து போயிடாதீங்க. அவர் உங்களை அவர் வழிக்கு கொண்டுவருவதற்காக தான் இப்படியெல்லாம் செய்கிறார். அவர் சாப்பிடாம இருப்பதெல்லாம் நடிப்பு தான். நீங்க இப்போ இருக்குறது மாதிரியே இருங்க என ஏத்திவிடுகிறார் மீனா. தன் அம்மாவுக்கு பிளான் போட்டுக் கொடுப்பது மீனா தானா என்கிற உண்மையை செந்தில் கண்டுபிடித்துவிடுகிறார். அதேபோல் கோமதி, மீனா பேச்சைக் கேட்டு தான் இப்படியெல்லாம் செய்கிறார் என்பதை ராஜி கண்டுபிடிக்கிறார்.

Related Articles

Related image1
சரவணன் - அஞ்சலி இடையே கள்ளக்காதலா? நேரில் பார்த்து ஷாக் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related image2
பாண்டியனை ரிவெஞ்ச் எடுக்கும் கோமதி... மீனா கொடுத்த சூப்பர் ஐடியா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
35
ஃபீல் பண்ணும் குமரவேல்
Image Credit : jiohotstar

ஃபீல் பண்ணும் குமரவேல்

மறுபுறம் குமரவேல் வீட்டில் ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஏனெனில் அவருக்கு வீட்டில் பெண் பார்த்திருக்கிறார்கள். அந்த வரன் மீது குமரவேலுக்கு சுத்தமாக விருப்பமே இல்லாததால், அவர் கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அவர் மனதில் அரசி தான் இருக்கிறார். அவரை தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற பிளானில் இருக்கிறார் குமரவேல். ஆனால் அவரின் அண்ணன்கள் அரசிக்கு தன்னுடைய தம்பியை கல்யாணம் பண்ணி கொடுக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறார்கள். இதனால் குமரவேல் கல்யாணத்தில் நிச்சயம் மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது.

45
கோமதி போட்ட கண்டிஷன்
Image Credit : jiohotstar

கோமதி போட்ட கண்டிஷன்

பாண்டியன் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் அரசி, ராஜி மற்றும் சரவணன் ஆகியோரை மிரட்டும் கோமதி, அவர் வந்து காஃபி கேட்பாரு, அவர் என்கிட்ட கேட்டா மட்டும் தான் நான் போட்டுக் கொடுப்பேன். அதற்கு முன் நீங்க யாராச்சும் போட்டுக் கொடுத்தீங்க அவ்வளவுதான் என எல்லோரையும் மிரட்டுகிறார். அதன்பின்னர் சாமி ரூமில் சென்று சிலைகளை துடைப்பது போல் ஆக்டிங் பண்ணுகிறார் கோமதி. அந்த நேரம் பார்த்து பாண்டியனும் வீட்டுக்கு வருகிறார். அவர் வந்த உடன் தனக்கு காஃபி வேண்டும் என கேட்கிறார். அரசி, ராஜி ஆகியோர் காஃபி போட செல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.

55
பல்பு வாங்கிய சரவணன்
Image Credit : jiohotstar

பல்பு வாங்கிய சரவணன்

பின்னர் பாண்டியன், இரண்டு மூன்று முறை சொன்ன பிறகு ராஜி விறுவிறுவென கிச்சனுக்கு சென்று காஃபி போடச் செல்கிறார். பின்னாடியே அரசியும் செல்கிறார். இதைப்பார்த்த கோமதி, வேகமாக கிச்சனுக்குள் சென்று காஃபி போடக் கூடாது என சொல்லிவிடுகிறார். இதையடுத்து கிச்சனுக்குள் வரும் சரவணன், அப்பாவுக்கு தன் கையால் காஃபி போடுகிறேன் என சொல்லி, சர்க்கரைக்கு பதிலாக உப்பை அள்ளிப் போட்டு காஃபியை எடுத்துச் சென்று பாண்டியனிடம் கொடுக்கிறார். அதைக் குடித்த பாண்டியன், துப்பிவிட்டு தனக்கு காஃபியே வேண்டாம் என செல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Recommended image2
Siragadikka Aasai : பிளாப் ஆன நீத்துவின் பிளான்... போலீஸிடம் மாட்டிவிட்ட ஸ்ருதி
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியால் ஜெயிலுக்கு போகும் ஜனனி? போலீஸ் விசாரணையில் நடந்த ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
சரவணன் - அஞ்சலி இடையே கள்ளக்காதலா? நேரில் பார்த்து ஷாக் ஆன மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
பாண்டியனை ரிவெஞ்ச் எடுக்கும் கோமதி... மீனா கொடுத்த சூப்பர் ஐடியா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved