MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் கல்யாணத்தில் விருப்பமே இல்லாமல் இருப்பதை அறிந்த அவரின் பாட்டி பெண் வீட்டாரிடம் பேசி கல்யாணத்தை நிறுத்தி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2026, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pandian Stores 2 Serial
Image Credit : jiohotstar

Pandian Stores 2 Serial

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேல் வீட்டின் வாசலில் சோகமாக நின்று கொண்டிருக்க, அவனிடம் வந்து பேசும் பாட்டி, சாப்பிடாம இருக்கனு உங்க அம்மா புலம்பிகிட்டே இருக்கா, நீ ஏண்டா இங்க வந்து நின்னுட்டு இருக்க, போயி சாப்பிடு நான் கோவிலுக்கு போயிட்டு வந்திடுறேன் என சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறார் காந்திமதி. நடந்தா போறீங்க நான் வேண்டுமானால் உங்களை பைக்கில் வந்து டிராப் பண்ணட்டுமா என குமரவேல் கேட்க, அதெல்லாம் வேண்டாம் டா பக்கத்துல தான் இருக்கு கோவில், நான் நடந்தே போயிக்கிறேன் என சொல்லிவிட்டு காந்திமதி கிளம்பிச் செல்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பெண் வீட்டாரிடம் பேசும் காந்திமதி
Image Credit : jiohotstar

பெண் வீட்டாரிடம் பேசும் காந்திமதி

கோவிலுக்கு காந்திமதி தனியாக வந்திருப்பதை பார்த்த பூசாரி, என்னம்மா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க, கூட யாரும் வரலயா என கேட்க, அதற்கு அவர் நாளைக்கு என்னோட பேரனுக்கு நிச்சயதார்த்தம், வீட்ல அதற்கான வேலைகள் போயிட்டு இருக்கு அதான் யாரும் வரல என சொல்கிறார். கோவிலுக்கு பெண் வீட்டாரை வரச்சொல்லி இருந்த காந்திமதி, அவர்களிடம், நீங்களும் காலகாலத்துல உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆசைப்படுறீங்க, நல்ல விஷயம் தான். ஆனால் நீங்க பொண்ணு கொடுக்கும் முன்னர் மாப்பிள்ளையை பத்தி வெளிய விசாரிச்சீங்களா என கேட்கிறார்.

Related Articles

Related image1
பாண்டியனை ரிவெஞ்ச் எடுக்கும் கோமதி... மீனா கொடுத்த சூப்பர் ஐடியா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Related image2
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
குமாரின் முதல் திருமணத்தை பற்றி சொன்ன காந்திமதி
Image Credit : jiohotstar

குமாரின் முதல் திருமணத்தை பற்றி சொன்ன காந்திமதி

அதற்கு அவர்கள், விசாரிச்சோம் எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க என கூறுகிறார்கள். நீங்க விசாரிச்சதுல, யாருமே குமாருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆன விஷயத்தை உங்ககிட்ட சொல்லலயா என காந்திமதி கேட்க, அவர்கள் ஷாக் ஆகிறார்கள். என்னோட மகள் கோமதியின் பொண்ணு அரசியும், குமாரும் காதலிச்சாங்க, அது அவங்க ஃபேமிலிக்கு புடிக்காம அரசிக்கு வேறொரு பையனுடன் திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். ஆனால் அந்த கல்யாணத்தில் அரசிக்கு விருப்பம் இல்லாததால், அவர் கல்யாணத்துக்கு முதல் நாள் குமரவேல் உடன் ஓடிப்போயிட்டா. அதுமட்டுமில்லாம குமார் அவ கழுத்துல தாலியும் கட்டிட்டான்.

45
கல்யாணத்தை நிறுத்தும் காந்திமதி
Image Credit : jiohotstar

கல்யாணத்தை நிறுத்தும் காந்திமதி

அதன்பின்னர் அரசி கொஞ்ச நாள் எங்க வீட்ல தான் இருந்தா, பிறகு ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை வந்திருச்சு. அதுக்கப்புறம் அவ அவங்க வீட்டுக்கே போயிட்டா. குமார் இன்னும் அந்த பொண்ணு அரசியை தான் நினைச்சிட்டு இருக்கான். இந்த நிலைமையில உங்க பொண்ணுக்கும் குமாருக்கும் கல்யாணம் நடந்தா நல்லா இருக்காதுல்ல, அதான் உங்ககிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்த முடிவெடுத்தேன். உங்க பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும், அவ நல்லபடியா வாழணும்னு ஆசைப்பட்டீங்கனா தயவு செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க என கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் காந்திமதி.

55
டபுள் சந்தோஷத்தில் தங்கமயில்
Image Credit : jiohotstar

டபுள் சந்தோஷத்தில் தங்கமயில்

மறுபுறம் மீனாவின் தோழி வீட்டில் வேலைக்கு சேர்ந்துள்ள தங்கமயில், எல்லா வேலைகளையும் நீட்டாக செய்து நல்ல பெயர் வாங்குகிறார். மீனாவின் தோழி வேகமாக வீட்டுக்கு வர என்னாச்சு என தங்கமயில் விசாரிக்கிறார். அப்போது சமையல்கார பெண் வேலையில் இருந்து திடீரென நின்றதை பற்றி கூறுகிறார். உடனே மயில், நானே இனி சமையல் வேலையும் பார்க்கிறேன் என சொல்ல, அதற்கு மீனாவின் தோழி, அப்போ அதற்கும் சேர்ந்து மொத்தம் 17 ஆயிரம் சம்பளமாக வாங்கிக்கோ என கூறுகிறார். இவ்வளவு சம்பளம் கிடைப்பதை நினைத்து சந்தோஷப்படும் மயில், இந்த தகவலை மீனாவிடம் போன் போட்டு சொல்லி உற்சாகமடைகிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image2
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Recommended image3
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Related Stories
Recommended image1
பாண்டியனை ரிவெஞ்ச் எடுக்கும் கோமதி... மீனா கொடுத்த சூப்பர் ஐடியா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image2
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved