MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Siragadikka Aasai : கர்ப்பமான ரோகிணி... மனோஜின் டைவர்ஸ் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட டாக்டர்..!

Siragadikka Aasai : கர்ப்பமான ரோகிணி... மனோஜின் டைவர்ஸ் பிளானில் மண்ணை அள்ளிப்போட்ட டாக்டர்..!

Siragadikka Aasai Serial 21 July 2026 Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடும் முன் மயங்கி விழுந்த ரோகிணி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 21 2026, 09:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstar

Siragadikka Aasai Serial Today Episode

விஜய் டிவியின் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் தற்போது அரங்கேறி உள்ள எதிர்பாராத திருப்பங்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. மனோஜ் - ரோகிணி விவாகரத்து நடக்கப் போகும் தருணத்தில் நடந்த சம்பவம் கதையின் போக்கையே மாற்றியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் முன்னிலையில், மனோஜின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக விவாகரத்துக்கு சம்மதிப்பதாக ரோகிணி தெரிவிக்கிறார். ஆனால் அவரது இந்த முடிவை நம்பாத விஜயா, இது எல்லாம் நாடகம் என்று கடுமையாக விமர்சித்து, உடனே கையெழுத்திட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு அழுத்தம் கொடுக்கிறார்.

Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மயங்கி விழுந்த ரோகிணி
Image Credit : jiohotstar

மயங்கி விழுந்த ரோகிணி

அனைவரும் ரோகிணியை அமைதிப்படுத்தி விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திடச் சொல்கிறார்கள். ரோகிணியும் பேனாவை எடுத்துக் கொண்டு கையெழுத்திட முயற்சிக்கிறார். ஆனால் கடைசி நொடியில் மனம் தளர்ந்து, கண்ணீர் மல்க அப்படியே நிற்கிறார். இதையும் விஜயா நடிப்பாகவே எடுத்துக்கொண்டு தொடர்ந்து அவமதிக்கிறார். இதையடுத்து வித்யா மீண்டும் ரோகிணியை சமாதானப்படுத்தி கையெழுத்திட வலியுறுத்துகிறார். இறுதியாக கையெழுத்திட பேனாவை எடுத்த அந்த நொடியில், ரோகிணி திடீரென மயங்கி கீழே விழுந்துவிடுகிறார்.

Related Articles

Related image1
Siragadikka Aasai : செம டோஸ் கொடுத்த விஜயா.... டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டாரா ரோகிணி?
Related image2
Siragadikka Aasai : மனோஜின் பணத்தால் மீண்டும் ஆட்டம் போடும் விஜயா... ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
35
ரோகிணியை பரிசோதித்த டாக்டர்
Image Credit : jiohotstar

ரோகிணியை பரிசோதித்த டாக்டர்

இருந்தபோதிலும், இதுவும் நாடகம் தான் என்று விஜயா குற்றம்சாட்ட, மற்றவர்கள் உடனடியாக ரோகிணியை கவனித்து மருத்துவரை அழைக்கிறார்கள். சிறிது நேரத்தில் வந்த மருத்துவர் ரோகிணியை பரிசோதித்த பிறகு, இவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா என கேட்கிறார். அதற்கு ஆம் என்று அருகில் இருந்த மீனா சொல்ல, விஜயா, இவளுக்கு இப்போ டைவர்ஸ் ஆகப்போகுது என கூறுகிறார். விவாகரத்து இன்னும் சட்டப்படி கிடைக்காததால், மனோஜ்தான் அவரது கணவர் என்று கூறியதும் கப்சிப் என ஆகிறார் விஜயா.

45
கர்ப்பமாக இருக்கும் ரோகிணி
Image Credit : jiohotstar

கர்ப்பமாக இருக்கும் ரோகிணி

அதன்பிறகு மருத்துவர் கூறும் தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரோகிணி கர்ப்பமாக இருப்பதாக அவர் சொல்கிறார். இந்த ஒரு தகவல் குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. குறிப்பாக மனோஜ் மற்றும் விஜயாவின் முகத்தில் அதிர்ச்சி தெளிவாக தெரிகிறது. மருத்துவர் சென்ற பிறகு கண் திறக்கும் ரோகிணிக்கும் தனது கர்ப்பம் குறித்து தெரிய வருகிறது. இருந்தாலும், விஜயா மீண்டும் விவாகரத்து ஆவணத்தில் கையெழுத்திட வற்புறுத்துகிறார். ஆனால் இம்முறை ரோகிணி உறுதியான முடிவை எடுக்கிறார்.

55
விவாகரத்துக்கு நோ சொன்ன ரோகிணி
Image Credit : jiohotstar

விவாகரத்துக்கு நோ சொன்ன ரோகிணி

"இனி என்னால் விவாகரத்து கையெழுத்து போட முடியாது. இந்த சூழ்நிலையில் மனோஜை விட்டு பிரிய மாட்டேன். அவருடன்தான் வாழப் போகிறேன்," என்று தனது இறுதி முடிவை ரோகிணி தெரிவிக்கிறார். இதனால் மனோஜ் வாழ்க்கை மிகப்பெரிய குழப்பத்தில் சிக்கியுள்ளது. ரோகிணியின் இந்த முடிவை குடும்பத்தினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? விஜயா அடுத்து என்ன செய்யப் போகிறார்? இந்த புதிய திருப்பம் மனோஜ் - ரோகிணி உறவை மீண்டும் இணைக்குமா? என்ற கேள்விகளுக்கு இனி வரும் எபிசோட்களில் பதில் கிடைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV-யை காப்பியடித்த விஜய் டிவி... சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களில் அதிரடி மாற்றம்
Recommended image2
Siragadikka Aasai : செம டோஸ் கொடுத்த விஜயா.... டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டாரா ரோகிணி?
Recommended image3
Siragadikka Aasai : மனோஜின் பணத்தால் மீண்டும் ஆட்டம் போடும் விஜயா... ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
Related Stories
Recommended image1
Siragadikka Aasai : செம டோஸ் கொடுத்த விஜயா.... டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டாரா ரோகிணி?
Recommended image2
Siragadikka Aasai : மனோஜின் பணத்தால் மீண்டும் ஆட்டம் போடும் விஜயா... ரோகிணிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved