CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!
CSIR UGC NET 2025 தேர்வு மைய அறிவிப்பு வெளியானது. csirnet.nta.nic.in இணையதளத்தில் உங்கள் தேர்வு நகரத்தை இப்போது தெரிந்துகொள்ளுங்கள்.

CSIR UGC NET தேர்வு மைய அறிவிப்பு வெளியீடு
தேசிய தேர்வு முகமை (NTA) டிசம்பர் 2025-க்கான கூட்டு CSIR-UGC NET தேர்வுக்கான அட்வான்ஸ் எக்ஸாம் சிட்டி ஸ்லிப்பை (Advance Exam City Slip) வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள், CSIR UGC NET-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான csirnet.nta.nic.in மூலம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு நகரம் எது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
தேர்வு தேதி மற்றும் நேர அட்டவணை
இந்தத் தேர்வானது வரும் டிசம்பர் 18, 2025 அன்று இரண்டு ஷிப்டுகளாக நடைபெறவுள்ளது.
• முதல் ஷிப்ட் (காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை): லைஃப் சயின்ஸ் (Life Sciences) மற்றும் எர்த், அட்மாஸ்பியரிக், ஓஷன் மற்றும் பிளானட்டரி சயின்ஸ் பாடங்களுக்கு நடைபெறும்.
• இரண்டாவது ஷிப்ட் (மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை): கெமிக்கல் சயின்ஸ், மேக்ஸ் மற்றும் பிசிகல் சயின்ஸ் பாடங்களுக்கு நடைபெறும்.
டவுன்லோட் செய்வது எப்படி?
தேர்வு நகர அறிவிப்புச் சீட்டைப் பதிவிறக்கம் செய்யக் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்:
1. முதலில் csirnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. முகப்புப் பக்கத்தில் உள்ள ‘CSIR UGC NET Exam 2025 advance exam city slip’ என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
3. புதிதாகத் திறக்கும் பக்கத்தில் உங்கள் லாகின் விவரங்களை (விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி) உள்ளிடவும்.
4. சப்மிட் கொடுத்ததும் உங்கள் எக்ஸாம் சிட்டி ஸ்லிப் திரையில் தோன்றும்.
5. அதனைச் சரிபார்த்து டவுன்லோட் செய்து, எதிர்காலத் தேவைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு: இது தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card) அல்ல. இது விண்ணப்பதாரர்களின் வசதிக்காக, தேர்வு மையம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அறிவிப்பு மட்டுமே. தேர்வுக்கான அட்மிட் கார்டு தனியாக விரைவில் வெளியிடப்படும்.
சந்தேகங்களுக்குத் தொடர்பு கொள்ள
தேர்வு நகர அறிவிப்பை டவுன்லோட் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், விண்ணப்பதாரர்கள் NTA ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளலாம்.
• தொலைபேசி எண்: 011-40759000
• மின்னஞ்சல்: csirnet@nta.ac.in

