MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • வெளிநாட்டில் படிக்க ஆசையா? பணம் ஒரு தடையல்ல! - இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் 'ஸ்காலர்ஷிப்' - மெகா உதவித்தொகை!

வெளிநாட்டில் படிக்க ஆசையா? பணம் ஒரு தடையல்ல! - இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் 'ஸ்காலர்ஷிப்' - மெகா உதவித்தொகை!

Scholarship  NCI கல்லூரி இந்திய மாணவர்களுக்காக ரூ.75 லட்சம் கல்வி உதவித்தொகையை அறிவித்துள்ளது. முதுகலை படிப்புகளுக்கான தகுதி மற்றும் விவரங்களை அறியவும்.

2 Min read
Author : Suresh Manthiram
Published : Mar 01 2026, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Scholarship அயர்லாந்தில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் ஸ்காலர்ஷிப்!
Image Credit : Gemini

Scholarship அயர்லாந்தில் உயர்கல்வி: இந்திய மாணவர்களுக்கு ரூ. 75 லட்சம் ஸ்காலர்ஷிப்!

வெளிநாட்டிற்குச் சென்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின் மிகப் பெரிய கனவு. ஆனால், அங்கு ஆகும் பெருந்தொகை செலவுகளை நினைத்து பலரும் பின்வாங்கி விடுகின்றனர். இந்த நிலையில், அயர்லாந்தில் (Ireland) உள்ள ஒரு முன்னணிப் பல்கலைக்கழகம், இந்திய மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெகா கல்வி உதவித்தொகையை (Scholarship) அறிவித்துள்ளது.

27
அயர்லாந்தின் தேசியக் கல்லூரி
Image Credit : Getty

அயர்லாந்தின் தேசியக் கல்லூரி

அயர்லாந்தின் தேசியக் கல்லூரியான 'நேஷனல் காலேஜ் ஆஃப் அயர்லாந்து' (National College of Ireland - NCI) தனது 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தச் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கல்வி மாநாட்டில், இந்தியாவிற்கான அயர்லாந்து தூதர் கெவின் கெல்லி முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்த உதவித்தொகை மூலம் எந்தெந்தப் படிப்புகளைப் படிக்கலாம்? தகுதிகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

Related Articles

Related image1
Govt Scholarship:அப்பாடி.! மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையா? விண்ணப்பித்து பெறுவது எப்படி தெரியுமா?
Related image2
Scholarship : திறமையான மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை.. முழு விபரம் இதோ !!
37
எந்தப் படிப்புகளுக்கு இந்த ஸ்காலர்ஷிப் பொருந்தும்?
Image Credit : stockPhoto

எந்தப் படிப்புகளுக்கு இந்த ஸ்காலர்ஷிப் பொருந்தும்?

இந்த 75 லட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையானது பிரத்தியேகமாக அயர்லாந்தில் முதுகலை (Postgraduate) படிக்கும் இந்திய மாணவர்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. குறிப்பாக, பிசினஸ் (Business), கம்ப்யூட்டிங் (Computing) மற்றும் சைக்காலஜி (Psychology) ஆகிய துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

47
பொருளாதாரச் சுமை பெருமளவு குறையும்
Image Credit : Getty

பொருளாதாரச் சுமை பெருமளவு குறையும்

கல்வி கட்டணக் குறைப்பு (Tuition fee reduction) என்ற அடிப்படையில் இந்த நிதியுதவி அளிக்கப்படும். அதாவது, மாணவர்களின் மதிப்பெண் தகுதி (Merit-based) மற்றும் அவர்களின் பொருளாதாரத் தேவையின் (Need-based) அடிப்படையில் இந்த உதவித்தொகை பிரிக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் திறமையான மாணவர்களின் பொருளாதாரச் சுமை பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

57
வேலைவாய்ப்பை உறுதி செய்யும் NCI கல்லூரி
Image Credit : Getty

வேலைவாய்ப்பை உறுதி செய்யும் NCI கல்லூரி

1951-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட NCI கல்லூரி, அயர்லாந்து அரசின் உயர் கல்வி ஆணையத்தின் நிதியுதவியுடன் செயல்படும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியாகும். சுமார் 6,500 மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர். டப்ளின் (Dublin) நகரில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி, வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், தொழில்துறைக்குத் (Industry-aligned) தேவையான நடைமுறைப் பயிற்சிகளை வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.

67
ஸ்காலர்ஷிப்
Image Credit : Gemini

ஸ்காலர்ஷிப்

NCI கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ஜினா க்வின் (Prof Gina Quinn) இதுகுறித்துப் பேசுகையில், "திறமையான இந்திய மாணவர்கள் வேலைவாய்ப்பை மையப்படுத்திய கல்வியைப் பெற இந்த ஸ்காலர்ஷிப் உதவும். அயர்லாந்தின் முன்னணி ஃபைனான்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களுடன் எங்கள் கல்லூரி நேரடித் தொடர்பில் இருப்பதால், படிப்பு முடிந்தவுடன் மாணவர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பும் கிடைக்கும்" என்று உறுதியளித்துள்ளார்.

77
இந்திய மாணவர்களின் ஃபேவரைட் நாடாக மாறும் அயர்லாந்து!
Image Credit : Getty

இந்திய மாணவர்களின் ஃபேவரைட் நாடாக மாறும் அயர்லாந்து!

சமீபகாலமாக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைத் தாண்டி, தரமான கல்வி மற்றும் பாதுகாப்பான சூழல் காரணமாக இந்திய மாணவர்கள் அயர்லாந்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். படிப்பு முடித்த பின் அங்கேயே வேலை தேடுவதற்கான சிறப்பான விசா சலுகைகளும் இருப்பதனால், இந்த NCI கல்லூரியின் ஸ்காலர்ஷிப் வாய்ப்பு, இந்திய மாணவர்களுக்குக் கிடைத்த ஒரு ஜாக்பாட் என்றே கூறலாம்!

About the Author

SM
Suresh Manthiram
இவர் தொடர்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் காட்சி தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். செய்தி எழுதுவதில் எட்டு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் பகுதி நேர ஊடகவியலாளராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்திருப்பதுடன், அதில் அனுபவமும் பெற்றிருக்கிறார். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்.
தொழில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CUET PG 2026: எந்த ஊரில் உங்களுக்குத் தேர்வு? - 'சிட்டி சிலிப்' வெளியீடு! உடனே செக் பண்ணுங்க!
Recommended image2
ரிசல்ட் வந்துருச்சு! - மெட்ராஸ் யுனிவர்சிட்டி 2026 தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி? முழு விவரம்!
Recommended image3
டிமாண்ட் அதிகம்.. ஆனால் போட்டி குறைவு! - பொறியியல் துறையில் ஒரு 'ஸ்மார்ட்' சாய்ஸ்!
Related Stories
Recommended image1
Govt Scholarship:அப்பாடி.! மாதம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகையா? விண்ணப்பித்து பெறுவது எப்படி தெரியுமா?
Recommended image2
Scholarship : திறமையான மாணவர்களுக்கு குட் நியூஸ்.. 1 லட்சம் வரை கல்வி உதவித்தொகை.. முழு விபரம் இதோ !!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved