‘‘தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்தில் தலைமை நீதிபதி ஏன் ஈடுபடவில்லை? என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி வாக்கு திருட்டு, ஆர்எஸ்எஸ்ஸை குறிவைத்து கேள்வி எழுப்பி உள்ளார்.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த மக்களவை விவாதத்தின் போது, காங்கிரஸ் எம்.பி.யும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கினார். ‘‘தேர்தல் ஆணையத்தின் பங்கு, வாக்கு திருட்டு, ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் பற்றி நான் ஆதாரமின்றி பேசுவதில்லை. நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பல்கலைக்கழகங்களில் வேந்தர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதில் ஆளும் கட்சிக்கே இறுதி உரிமை உண்டு. ஆளும் கட்சிதான் தேர்தல் ஆணையத்தைக் கட்டுப்படுத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையரை (சிஇசி) கட்டுப்படுத்துவது என்றால் என்ன? தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனத்தில் தலைமை நீதிபதி ஏன் ஈடுபடவில்லை?

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை நாங்கள் வழங்கினோம். சிசிடிவி காட்சிகளை அழிக்க தேர்தல் ஆணையத்திற்கு ஏன் அதிகாரம் வழங்கப்பட்டது? தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு தண்டனை வழங்குவதற்கான விதி ஏன் நீக்கப்பட்டது? அரசாங்கம் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துகிறது. நகல் வாக்களிப்பு பிரச்சினைக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. எஸ்.ஐ.ஆருக்குப் பிறகும், பீகாரில் நகல் வாக்காளர்கள் உள்ளனர். எஸ்.ஐ.ஆருக்குப் பிறகும், பீகாரில் 1.50 லட்சம் நகல் புகைப்படங்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுபரிசீலனைக்கு எங்களிடம் வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல்களை ஒரு மாதத்திற்கு முன்பே வழங்க வேண்டும்.

தேர்தல் ஆணையத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டது. தேர்தல் ஆணையம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை அழிக்க தேர்தல் ஆணையம் பயன்படுத்தப்படுகிறது. தலைமைத் தேர்தல் ஆணையத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஆளும் கட்சிக்கே இறுதி உரிமை உண்டு.
ஹரியானா தேர்தல்கள் திருடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பிரேசிலிய மாடலின் பெயர் 22 முறை இடம்பெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் பெயர் 200 முறை இடம்பெற்றுள்ளது. 0பாஜகவின் வேண்டுகோளின் பேரில் எஸ்.ஐ.ஆர் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது போலி வாக்காளர்கள் பிரச்சினைக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை. வாக்கு திருட்டு என்பது தேச விரோத செயல். நமது நாடு ஒரு துணி போன்றது. அதன் அனைத்து நூல்களும் ஒன்றே. அனைத்து மக்களும் சமம்’’ என்று அவர் தெரிவித்தார்.

