- Home
- Politics
- மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
திமுகவின் வாக்குகளையே விஜய் உடைக்கிறார். திமுக அப்படியே வெற்றி பெற்றாலும் பத்தாது. சிங்கிள் மெஜாரிட்டி பெற்று திமுக ஆட்சியில் உட்கார வேண்டும். இல்லை என்றால் அமித் ஷா விளையாடுவார். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தால் அது திமுகவுக்கு பலவீனம்.

ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள சம்மதம்?
பரபரப்பான அரசியல் சூழலில் நாளை அதிமுகவின் பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழுவில் பல விஷயங்கள் நடைக்கலாம். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸை மனம் இறங்கி சேர்த்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் வெளியேறியதை ஈடுகட்ட ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதித்து விட்டார் எனவும் அதிமுகவினர் கூறுகின்றனர்.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி கூறுகையில், ‘‘ நாளை அதிமுகவின் பொதுக்குழு நடைபெற உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸை மனம் இறங்கி சேர்த்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால் 15 ஆம் தேதி கட்சி ஆரம்பிப்பேன் என்கிறார் ஓபிஎஸ். இன்னும் ஒரு வாரத்தில் இது தெளிவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லை என்றாலும் ஒரு மாத காலத்தில் நிலைமை சீரடையலாம். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸை அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்க சம்மதம் தெரிவித்துவிட்டார். அவர் ஓபிஎஸை சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும், உறுதியாக எதையும் சொல்ல முடியாது. ஆனால் இவ்வளவு நாள் எதிர் குரல் கொடுத்து வந்த கேசி பழனிச்சாமியையே எடப்பாடி பழனிச்சாமி சேர்த்துக் கொள்வதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகரிக்கும் அழுத்தம்
ஓபிஎஸ் தவிர மற்ற அனைவரையும் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்ளப் போகிறார் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையன் வெளியேறிய இழப்பை சரி செய்வதற்கு ஓபிஎஸையும் சேர்த்துக் கொள்வார். செங்கோட்டையன் வெளியேறியது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு ஜெர்க் ஆகியிருக்கிறது. யாரையும் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்ற அவரது பிடிவாதம் மெல்ல மெல்ல தளர ஆரம்பித்திருக்கிறது. நாளை நடக்கும் பொது குழுவில் ஒரு தெளிவு கிடைக்கலாம். இல்லை, பொதுக்குழுவிலும் நீக்கியது நீக்கியதுதான் என்கிற தொணியில் எடப்பாடி பழனிசாமி பேசினால் நிலைமை மோசமாகிவிடும். ஏனென்றால் ஓபிஎஸ், அமித் ஷாவையும் சந்தித்து வந்திருப்பதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழுத்தம் அதிகரித்து இருக்கிறது.
நாளை நடக்கும் பொது குழுவில் அதிமுக எந்த திசையில் போகப் போகிறது என்பது தெளிவாகிவிடும். ஓபிஎஸ், சசிகலா என அதிமுகவில் இருந்தவர்களை சேர்த்துக் கொள்ளக்கூடிய அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமியிடம்தான் இருக்கிறது. அவர்களை இணைத்துக்கொள்ள பாஜக எவ்வளவோ அழுத்தம் கொடுத்தது. ஆனால் இது எங்கள் கட்சி, நாங்கள் தான் முடிவெடுப்போம் என்று அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டார். பாஜக கூட்டணிக்கு எடப்பாடியை அழைத்து வரும்போது, ‘நாங்கள் எதையும் வற்புறுத்த மாட்டோம்’ என்று வாக்குறுதி கொடுத்து தான் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக அழைத்து வந்தது. ஆனால் இன்றைக்கு நிலைமை மோசமாக போவதால் எடப்பாடி பழனிச்சாமிக்க பாஜக அழுத்தம் கொடுக்கிறது. ஆனாலும், ஒரு கட்டத்திற்கு மேல் பாஜக, எடப்பாடி பழனிசாமியின் கரங்களை முறுக்க முடியாது. எடப்பாடி பழனிச்சாமி திமிறி கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறி விட்டால் பாஜக தண்ணீர் குடிக்க வேண்டிய நிலைமை ஆகிவிடும்.
செங்கோட்டையன் வெளியேறியதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவலை
அதிமுகவுடன் தமிழகத்தில் கூட்டணி இல்லை என்றால் பாஜக இங்கு சைபர் தான். ஆகையால் ஒரு கட்டத்திற்கு மேல் பாஜகவால் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்பதை உணர்ந்து விட்டார். செங்கோட்டையனை வெளியே அனுப்பிய பிறகு அவரது பிடிவாதமும் தளர ஆரம்பித்திருக்கிறது. கட்சியில் இருக்கக்கூடிய அதிமுக முக்க நிர்வாகிகள் எல்லாருக்குமே செங்கோட்டையன் வெளியேறியதை விருப்பமில்லை. ஆனால் வாயை திறந்து பேச மறுக்கிறார்கள். நாளை நடக்கும் பொதுக்குழுவில் கேசி பழனிசாமி உள்ளிட்ட இன்னும் சிலரை சேர்த்துக் கொண்டார்கள் என்றால் ஓபிஎஸையும் சேர்த்துக் கொண்டார் என்றால் இந்த பிரச்சனை முடிந்துவிடும். அதிமுகவில் உள்ள பிரச்சினை ஓ.பி.எஸ் என்கிற ஒரே ஆளை சேர்த்துக் கொண்டால் முடிவுக்கு வந்துவிடும். டிடிவி.தினகரன் தனி கட்சி ஆரம்பித்துவிட்டு எப்போதோ சென்று விட்டார். அவரை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வந்தால் பிரச்சினை முடிந்துவிடும். அப்படி ஏற்றுக்கொள்ள எடப்பாடி தயாராகிவிட்டார்.
அந்த வகையில் சசிகலாவும் எளிதாக வந்துவிடுவார். ஓபிஎஸ், டிடிவி.தினகரன் இருவரும் தான் இப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரச்சினையே. ஆனால், சசிகலா உள்ளே வருவதில் டிடிவி.தினகரன் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனென்றால் அவர் தனி கட்சி வைத்திருக்கிறார். ஓபிஎஸுக்கு தன்னை சேர்த்துக் கொண்டால் போதும். அவருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை.
செங்கோட்டையன் வெளியே சென்றதில் அதிர்ச்சியில் இருந்து அதிமுக மீள வேண்டுமென்றால் எல்லோரையும் ஒன்று சேர்த்துக் கொண்டால் மட்டுமே அதை சரி கட்ட முடியும். செங்கோட்டையன் வெளியேறியதால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கவலை வந்திருக்கிறது. அவரிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. செங்கோட்டையன் சென்றதில் இருந்து நிலைமை மாறி இருக்கிறது என்பதை அவரும் உணர்கிறார் என்று நம்புகிறேன்.
ஒன்றுபட்ட அதிமுக உருவானால் திமுக தோற்பது உறுதி. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஒன்றுபட்ட அதிமுகவின் சக்தியே வேறு. ஒன்று பட்ட அதிமுகவுடன் பாமக, தேமுதிக என கூட்டணி அமைந்தால் விஜயின் ஃபேக்டரை தாண்டி அதிமுக ஆட்சியை கொண்டு வரலாம். ஆனால், ஒன்றுபட்ட அதிமுக இல்லையென்றால் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. அதிமுக ஒன்றாக இருந்த காலத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுக வெற்றி பெற்றது கிடையாது. அதிமுக உடைந்த போது திமுக வெற்றி பெற்றிருக்கிறது அல்லது அதீதமான அட்டூழியங்கள் செய்த போது திமுக வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக கட்சி இரட்டை இலை சின்னத்தில் ஒன்றாக நிற்கிறது என்றால் அதிமுகவை தான் மக்கள் விரும்புவார்கள். திமுகவின் பெரிய சாபக்கேடு இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பது. திமுக ஆட்சியில் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
அமித் ஷா விளையாடுவார்
திமுகவின் மிகப்பெரிய பலம் அதிமுக சித்தரிக்கிடப்பது. அதிமுகவை ஒன்றினை விடாமல் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதுதான் அரசியல். அது சரி, தவறு என்று சொல்ல முடியாது. அதிமுகவில் உள்ளவர்கள் புத்தி எங்கே சென்றது? எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேச அதிமுகவில் உள்ள சீனர்களே அஞ்சுகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி பெற ஒன்றிணைப்பதுதான் ஒரு நல்ல வாய்ப்பு. ஓபிஎஸ், டிடிவி.தினகரனை எல்லாம் உள்ளே கொண்டு வந்து விட்டால், கூட்டணி வைத்துவிட்டால் அதிமுக வெற்றி பெற்று விடும். 2021ல் இருந்த பலம் திமுகவுக்கு இப்போது இல்லை. அவர்கள் மீது எதிர்ப்பு அலை வீசுகிறது. நடக்கப் போவது சட்டமன்றத் தேர்தல். ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் இங்கே கேள்வி .
திமுக ஆட்சியின் மீதுள்ள அதிருப்திகள், மோடியின் எதிர்ப்பை ஒன்றும் செய்யாது. ஐந்து வருடம் ஆட்சியில் இருந்து விட்டு மக்களிடம் செல்கிறீர்கள். ஒவ்வொரு தொகுதியிலும் அவ்வளவு பிரச்சினைகள் இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் மக்கள் அவ்வளவு அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், தனியார் துறை ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் என போராட்டம் நடக்காத துறைகளே இநந்த ஆட்சியில் கிடையாது. தலித்துகளுக்கு எதிரான கொடுமைகள் நடக்கக்கூடிய மாநிலம் என 2023 புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அது யாருடைய ஆட்சி? ஸ்டாலினின் ஆட்சி. 2021ல் திருமா திமுக கூட்டணியில் இருந்தார். ஆனால் இப்போது விஜய், விசிகவின் ஓட்டை கணிசமாக உடைக்கிறார்.
திமுகவின் வாக்குகளையே விஜய் உடைக்கிறார். திமுக அப்படியே வெற்றி பெற்றாலும் பத்தாது. சிங்கிள் மெஜாரிட்டி பெற்று திமுக ஆட்சியில் உட்கார வேண்டும். அப்படி இல்லை என்றால் அமித் ஷா விளையாடுவார். கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தால் அது திமுகவுக்கு பலவீனம். ஆனால், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு திமுக வெல்வது அவ்வளவு எளிதல்ல. கடுமையாக போராட வேண்டும். என்னை பொறுத்தவரை அதிமுகவைவிட, திமுகவுக்குத்தான் இந்த தேர்தல் மிகப்பெரிய நெருக்கடி. ஆனால், அதிமுக தொடர்ந்து இந்த முறையும் தோல்வியை தழுவினால் மிகப் பெரிய நெருக்கடிக்கு ஆளாகிவிடும்’’ எனக்கூறுகிறார்.
