- Home
- Politics
- விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
விஜய் கூட்டணிக்கு வராவிட்டால்..? அமித் ஷாவின் ஹிடன் அஜெண்டா..! திமுகவுக்கு பொறி வைக்கும் ஃபைல்ஸ்..!
தமிழ்நாட்டில் முயற்சி செய்தால் பாஜக கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஏற்கனவே டெல்லிக்கு லிஸ்ட் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸின் பங்களிப்பும் இனி தமிழக தேர்தலில் இருக்கும்.

குஜராத்தில் கிட்டத்தட்ட 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் அகமதாபாத்தில் மேடை ஏறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. பீகாரில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கும் நாம் அடுத்து, தமிழ்நாட்டிலும், மேற்கு வங்காளத்திலும், மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சியையும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியையும் துடைத்தெரிவோம். அங்கே நம்முடைய கூட்டணி ஆட்சி தான் அமையப்போகிறது என சபதமே போட்டிருக்கிறார்.
அத்தோடு அயோத்தில நம்ம ராமர் கோவில் கட்டிவிட்டோம். அடுத்து நம்முடைய சீதாதேவிக்காக பீஹாரில் கோயில் கட்டப் போகிறோம். 2026 சாத்தியமாகிடும் என அடுத்த கட்ட அஜெண்டாவையும் பதிவு செய்திருக்கிறார். தமிழ்நாடு தேர்தலில் அவரது வியூகம் குறித்துபேசிய பாஜகவினர், ‘ 2026 வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணி அமைக்க அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்தார். நிறைய கட்சிகளை கூட்டணியில சேர்த்து வலுப்படுத்த வேண்டும் என நினைக்கிறார். பல்வேறு கட்சியினர் முக்கிய அரசியல் தலைவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சரான ஓ.பி.எஸை சமீபத்தில் டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கிறார்கள்.
அவரிடம், கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தனி ரூட்டெல்லாம் எடுக்க வேண்டாம் என சொல்லி அனுப்பி இருக்கிறார். இன்னொரு பக்கம் பாமக, தேமுதிக என பலரையும் என்.டி.ஏ பக்கம் கொண்டு வர பேச்சுவார்த்தை எல்லாம் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து தமிழ்நாட்டுக்கு விரைவில் வர இருக்கிறார். அந்த நேரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொது ச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி. சண்முகம், ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரை சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு மெகா கூட்டணியை இந்த முறை உறுதிப்படுத்தி விடலாம் என சில நகர்வுகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். இதற்கு அடுத்து மிக மிக முக்கியமாக முடிந்தவரை எதிர்க்கட்சி கூட்டணி வலிமைப்படுத்துவதற்காக தவெகவை என்.டி.ஏ கூட்டணிக்கு கொண்டு வருவதற்கும் முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
அதனால், இப்போதும் பாஜக தமிழ்நாடு தலைவர்கள் தவெகவை ஒரு சாஃப்டாகத்தான் அப்ரோச் செய்து கொண்டு இருக்கிறார்காள். அப்படி தவெக மிஸ்ஸானால் அடுத்த பி - பிளானும் இருக்கிறது. விஜய் தலைமையிலான தவெகவுடன் பெரிய கட்சிகள் ஒரு மெகா கூட்டணி அமைத்து விடக்கூடாது என கவனமாக இருக்கிறது. தவெக ஒரு பிரம்மாண்டமான கூட்டணிய முன் எடுக்கும். தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த பக்கமும் துண்டு போட்டு திரும்பத் திரும்ப அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். ஒரு வலிமையான கூட்டணியை தவெக உருவாக்கிவிடக் கூடாது. அதை தடுக்க வேண்டும். அப்போதுதான் பிரியக்கூடிய வாக்குகள் தங்களுக்கு சாதகமாக அமையும் என கணக்கும் இருக்கிறது.
மைனாரிட்டி வாக்குகளை தவெக பிரித்தால், அதை நம்பி இருக்கும் திமுக, காங்கிரஸுக்கு அடிவிலும் என ஒரு கணக்கு போடுகிறார் அமித் ஷா. இதற்கடுத்து உட்கட்சியில் உள்ள பிரச்சனைகள். நயினார் நாகேந்திரன் தலைமை பொறுப்புக்கு வந்ததில் இருந்து ஒரு கோல்ட் வார் ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்நாள் தலைவர் நயினாருக்கும் இடையே இந்தப் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என ஏற்கனவே இரு தரப்பிலும் கூப்பிட்டு வைத்து பேசி இருக்கிறார்கள்.
டிடிவி. தினகரன் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து வெளியேறினார். திடீரென எடப்பாடி பழனிசாமி சிஎம் வேட்பாளராக இருந்தால் நாங்கள் ஆதரிக்க மாட்டோம் எனச் சொல்லி வருகிறார். அடுத்து திமுக அமைச்சர்கள், சீனியர்கள் என அவர்களை டார்கெட் செய்து அவர்கள் மீது இருக்கக்கூடிய வழக்குகள், புகார்களை எல்லாம் தூசு தட்டி, அதை வைத்து அவர்களை அலைய வைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமமே அவர்களுடைய கவனம் தேர்தல் வெற்றி நோக்கி இருக்காது. அவர்களுக்கு நிறைய மண்டலங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். அதில் பல்வேறு தொகுதியில் ஒவ்வொரு அமைச்சருக்கும் கிட்டத்தட்ட 30, 35 தொகுதிகள் இருக்கிறது. அங்கே கவனம் செலுத்த விடாமல் செய்டால் தங்களுடைய தொகுதியில் மட்டும்தான் கவனம் செலுத்துவார்கள். அதை நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிட்டத்தட்ட ஏழு, எட்டு அமைச்சர்கள் மீது பக்காவான பைல்ஸ் எல்லாம் கொடுத்து இருக்கிறார்.
தமிழ்நாட்டில் முயற்சி செய்தால் பாஜக கிட்டத்தட்ட 60 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என ஏற்கனவே டெல்லிக்கு லிஸ்ட் அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆர்எஸ்எஸின் பங்களிப்பும் இனி தமிழக தேர்தலில் இருக்கும். ஆன்மீக தொகுதிகளில் பிரத்யேகமாக இன்னும் கவனம் எடுத்து வேலை செய்ய வேண்டும். அங்கே தொடர்ந்து மூத்த தலைவர்கள் எல்லாம் விசிட் அடிக்க வேண்டும் என சில வொர்க் சீட் எல்லாம் போட்டு இருக்கிறார்கள். இதில் மிக முக்கியமா தமிழ்நாட்டில் ஆன்மீகம் சார்ந்த விஷயங்களை கையில் எடுத்து தொடர்ந்து ஆன்மீகத்துக்கு எதிராக திமுக ஆட்சி இருக்கிறது என பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும் திட்டம் போட்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரமும் இதில் இருக்கிறது’’ என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.
