- Home
- Tamil Nadu News
- மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!
அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த வெல்லமண்டி நடராஜன் 2016 - 2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

அதிமுகவில் இணைந்த வெல்லமண்டி நடராஜன்
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக ஓபிஎஸ் ஆதரவாளர் வெல்லமண்டி நடராஜன் இன்று (பிப்ரவரி 27) மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்த நிலையில், வெல்லமண்டி நடராஜனும் திமுகவில் இணைவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
மீண்டும் இபிஎஸ் பக்கம் சாய்ந்தது ஏன்?
அதிமுகவில் முக்கிய தலைவராக இருந்த வெல்லமண்டி நடராஜன் 2016 - 2021 அதிமுக ஆட்சிக்காலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற அவர் அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பி ஓபிஎஸ் பக்கம் நின்றார்.
ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் திமுக பக்கம் சென்ற நிலையில், ஓபிஎஸ்ஸும் திமுகவில் தஞ்சம் அடைந்தார். இந்த நிலையில் தான் வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் மீண்டும் ஐக்கியமாகியுள்ளார்.

