
கள்ளக்குறிச்சி பரபரப்பு : எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை கோரி DYFI போராட்டம் !
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கைது செய்யக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) அவரது அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதோடு, எம்எல்ஏ-வுக்கு எதிராகவும் காவல்துறை நடவடிக்கைக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். இது தொடர்பான போராட்டக் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன.