
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத தமிழக அரசைக் கண்டித்து மதுரையில் வழக்கறிஞர்கள் போராட்டம் !
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழியை மீறிச் செயல்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர். அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகச் செயல்படும் மாநில அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிய வழக்கறிஞர்கள், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பான போராட்டக் காட்சிகள் மற்றும் உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் உள்ளிட்ட வழக்கறிஞர்களின் பேட்டிகள் இதில் இடம்பெற்றுள்ளன.