MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக

திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக

ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்கிற இலக்கணத்தோடு தளபதி திமுகவை வழிநடத்துகிறார். இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 27 2026, 12:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்: பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் இணைவது மகிழ்ச்சி. திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன்.

25
Image Credit : Asianet News

திமுக வளர்ச்சிக்கு தொண்டனாக பாடுபடுவேன். பாசத்தோடு அரவணைத்த தளபதிக்கு நன்றி. அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் முதலமைச்சர் ஆனதில் இருந்து சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாருக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Related Articles

Related image1
இபிஎஸ்-ஐ பழிவாங்க ஓபிஎஸ் அதிரடி முடிவு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்? குஷியில் முதல்வர்
Related image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
35
Image Credit : X/OPS

ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்கிற இலக்கணத்தோடு தளபதி திமுகவை வழிநடத்தி சென்று வருகிறார். இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையான கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவை தீய சக்தி என்று நான் என்றைக்குமே சொன்னது கிடையாது.

45
Image Credit : Asianet News

எடப்பாடி பழனிசாமி அதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அவர் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டத்தில் எந்த தலைவரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி என்றும் வெல்ல முடியாத சூழலை உருவாக்கி உள்ளார். இபிஎஸ்க்கு தலைமைப்பண்பு இல்லை என்று ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

55
Image Credit : ADMK

ஏற்கனவே இடஒதுக்கீடு விவகாரத்தில் தென்மாவட்ட மக்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் ஓபிஎஸ் தென் மாவட்டத்தில் எந்த தலைவரும் வளர்ந்து விடக்கூடாது என்று இபிஎஸ் இருப்பதாக கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓ. பன்னீர்செல்வம் - அதிமுக
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்..! பன்னீரை வருகை.. குஷியில் ஸ்டாலின் போட்ட பதிவு..
Recommended image2
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!
Recommended image3
இபிஎஸ்-ஐ பழிவாங்க ஓபிஎஸ் அதிரடி முடிவு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்? குஷியில் முதல்வர்
Related Stories
Recommended image1
இபிஎஸ்-ஐ பழிவாங்க ஓபிஎஸ் அதிரடி முடிவு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்? குஷியில் முதல்வர்
Recommended image2
திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved