MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?

திமுகவுக்கு டாடா.. விஜய்யுடன் 'கை' கோர்க்கும் காங்கிரஸ்.. தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்?

ஒரு கட்டத்தில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை கடுமையாக வசைபாட திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் டென்ஷன் ஆனார். ஆட்சியில் பங்கு கிடையாது என ஆணித்தரமாக கூறினார்

2 Min read
Author : Rayar r
Published : Feb 26 2026, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்
Image Credit : x

ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்த காங்கிரஸ்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் தினமும் பரபரப்பாக சென்று வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? இருக்காதா? என்பதே இப்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது. தேர்தல் பேச்சு தொடங்கியது முதல் கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான காங்கிரஸ் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டது மட்டுமின்றி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது.

காங்கிரஸ் தந்திரம்

காங்கிரஸ் மிகவும் தந்திரமாக ஒருபக்கம் மாணிக்கம் தாகூர் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களை 'திமுக கூடுதல் சீட் தர வேண்டும். ஆட்சியில் பங்கு தர வேண்டும்' என பேச வைத்து விட்டு மறுபக்கம் மூத்த தலைவர்களை 'திமுகவை விட்டு எப்போதும் வெளியேற மாட்டோம்' என கூற வைத்து டபுள் கேம் ஆடி வந்தது. மறுபுறம் நடிகர் விஜய்யின் தவெகவிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி திமுகவுக்கு பூச்சாண்டி வந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
டென்ஷன் ஆன திமுக‌
Image Credit : Asianet News

டென்ஷன் ஆன திமுக‌

ஒரு கட்டத்தில் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை கடுமையாக வசைபாட திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் டென்ஷன் ஆனார். ஆட்சியில் பங்கு கிடையாது என ஆணித்தரமாக கூறினார்.

 மாணிக்கம் தாகூர் உள்பட திமுகவை விமர்சித்தவர்கள் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த பேச்சுவார்த்தை என தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இனிமேல் யாரும் இப்படி பேச மாட்டார்கள் என திமுகவுக்கு வாக்குறுதி அளித்தது.

Related Articles

Related image1
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Related image2
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!
34
தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்
Image Credit : Asianet News

தவெகவுடன் முடிந்த ரகசிய டீல்

இதன் பிறகு காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியபோது காங்கிரஸ் தரப்பில் 39 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் கேட்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் 21 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என கைவிரித்ததாக கூறப்படுகிறது. 

திமுக இப்படி செய்யும் என முன்கூட்டியே கணித்த காங்கிரஸ், தவெகவுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. அந்த பேச்சுவார்த்தையின்படி தவெகவுடன் டீல் முடிந்து விட்டதாகவும், தவெக கூட்டணியில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

44
உண்மையை போட்டுடைத்த கிரிஷ் சோடங்கர்
Image Credit : x

உண்மையை போட்டுடைத்த கிரிஷ் சோடங்கர்

காங்கிரஸுக்கு சாய்ஸாக தவெக இருப்பதால், திமுக கிள்ளி கொடுக்கும் தொகுதிகளை பெறுவதை விட நமக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஜய்யுடன் கைகோர்க்கலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனை வைத்தே காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ''அதிகாரம் வேண்டும் என திமுகவுடன் கேட்டுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம். தொண்டு நிறுவனம் நடத்தவில்லை. எங்களுக்கும் விருப்பம் உண்டு. திமுக இன்னும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. 

தவெக பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. எங்களின் பலத்தை தவெக புரிந்துள்ளது'' என்று வெளிப்படையாக பேசியதாக அரசியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். தவெக, காங்கிரஸ் கூட்டணி குறித்து கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்
டிவி.கே. விஜய்
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday: தொடர் விடுமுறை! அரசு போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்! பயணிகளின் கவனத்திற்கு..!
Recommended image2
Now Playing
சிறுமிக்கு நேர்ந்த கொடுமை! சாட்டையை கையில் எடுத்த விஜய்! தவெக மீது உதயநிதி, இபிஎஸ் பாய்ச்சல்!
Recommended image3
TN Crop Loan Waiver : விவசாயிகளுக்கு ஜாக்பாட்! பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி! தமிழக அரசு அறிவிப்பு! முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Recommended image2
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved