MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!

ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!

கட்சியில் கூட்டணி குறித்து தனிநபர்கள் பேசியது அவர்களின் சொந்த கருத்து என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணிக்கம் தாகூருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : Rayar A
Published : Feb 17 2026, 08:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுகவுக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ்
Image Credit : Google

திமுகவுக்கு அழுத்தம் கொடுத்த காங்கிரஸ்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 2ம் கட்ட தலைவர்கள் ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு வேண்டும். கூடுதல் தொகுதிகள் வேண்டும் என தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆட்சியில் பங்கு தர முடியாது என திமுக தலைமை தெளிவாக சொல்லி விட்டது.

திமுகவை எகிறி அடித்த மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் தலைமையும் கூட்டணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம் என கூறியிருந்தது. ஆனாலும் விடாத மாணிக்கம் தாகூர், 'காங்கிரசால் தான் திமுக ஜெயித்தது. 2ஜி ஊழல் வழக்கில் திமுக மீதான பழியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது' என்று பேசியிருந்தார். இது இரு கட்சிகளுக்கும் பெரும் வார்த்தை மோதலை உண்டாக்கியிருந்தது. இதனால் திமுக, காங்கிரஸ் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற‌ சூழல் ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
திமுக தலைமை டென்ஷன்
Image Credit : Asianet News

திமுக தலைமை டென்ஷன்

மாணிக்கம் தாகூரின் பேச்சு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் புகார் அளித்திருந்தார். மாணிக்கம் தாகூர் பேச்சால் டென்ஷன் ஆன திமுக தலைமை, அவர் மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.

34
மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை
Image Credit : Google

மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை முகப்பேரில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்கு குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கூட்டணி குறித்து யார் பொதுவெளியில் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

44
திமுகவுடன் கூட்டணி தொடரும்
Image Credit : X/@arivalayam

திமுகவுடன் கூட்டணி தொடரும்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.வேணுகோபால், ''திமுக எங்களின் பழைய கூட்டாளி. திமுகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்திருந்தோம். இப்போது சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி வைத்திருக்கிறோம். இந்த கூட்டணி தொடரும். பாஜக உள்ளிட்ட வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்க திமுகவுடன் ஒன்று சேர்ந்துள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல‌

கூட்டணி குறித்து காங்கிரஸின் 2ம் கட்ட தலைவர்கள் பேசியது அவர்களது தனிப்பட்ட கருத்து. இது காங்கிரசின் கருத்து அல்ல. கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை திமுக தலைமையிடம் பேசி முடிவெடுக்கும். காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ பேசக்கூடாது என கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.

எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்‍போம்

திமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை அழைப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.எங்களுக்கும் சில லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது எங்களின் நிலைப்பாட்டை எடுத்து வைப்போம்'' என்று தெரிவித்தார். 

கே.சி.வேணுகோபாலின் எச்சரிக்கையால் திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்த பிரச்சனை நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாணிக்கம் தாகூரின் ரியாக்ஷன் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்
மு. க. ஸ்டாலின்
தமிழ்நாடு
அரசியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ration Card : ரேஷன் கார்டு அப்டேட் பண்ண சூப்பர் வாய்ப்பு! சென்னையில் நடக்கும் சிறப்பு முகாம்!
Recommended image2
Now Playing
பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் அமைச்சர் பேச்சு!
Recommended image3
Now Playing
தூத்துக்குடி நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
Related Stories
Recommended image1
2014-ல் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவின் 2ஜி ஊழல்தான் காரணம்..! சல்லி சல்லியாய் உடைக்கும் மாணிக்கம் தாகூர்..!
Recommended image2
நாங்க அண்ணன் தம்பி... யாரும் சிண்டு முடிச்சு விடாதீங்க..! ரூட்டை மாற்றிய மாணிக்கம் தாகூர்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved