MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இபிஎஸ்-ஐ பழிவாங்க ஓபிஎஸ் அதிரடி முடிவு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்? குஷியில் முதல்வர்

இபிஎஸ்-ஐ பழிவாங்க ஓபிஎஸ் அதிரடி முடிவு.. எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறார்? குஷியில் முதல்வர்

OPanneerselvam: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 27 2026, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்
Image Credit : our own

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது ஐவர் குழு மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்து வந்தார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க முடியாத சூழல்களில் 2001, 2014-ல் அவருக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார்.

25
ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்
Image Credit : our own

ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல்

பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டனர். 2022-ம் ஆண்டு முதல் அதிமுகவில் தம்மை மீண்டும் சேர்க்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை ஓபிஎஸ் மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் என ஓபிஎஸ் கூறியிருந்தார். ஆனால் ஓபிஎஸ்ஸை ஒருபோதும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியிருந்தார்.

Related Articles

Related image1
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Related image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
35
சட்டப்பேரவையில் திமுகவை புகழ்ந்த ஓபிஎஸ்
Image Credit : our own

சட்டப்பேரவையில் திமுகவை புகழ்ந்த ஓபிஎஸ்

இதனால் ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதேபோல் மாநிலங்களவை பதவியை வாங்கி கொடுத்த ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மர் அதிமுகவில் இணைந்தார். ஒருசிலர் தவெகவில் இணைந்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அண்மையில் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதாகவும், மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என ஓபிஎஸ், ஐயப்பன் இருவரும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

45
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
Image Credit : Asianet News

திமுகவில் இணைந்த ஓபிஎஸ்

இந்நிலையில் அதிமுகவில் தன்னை சேர்க்காத எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க வேறு வழியில்லாமல் திமுகவில் இணைய ஓபிஎஸ் முடிவு எடுத்தார். அதன்படி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

55
முதல்வர் ஸ்டாலின் அஸ்திரம்
Image Credit : Asianet News

முதல்வர் ஸ்டாலின் அஸ்திரம்

இதனையடுத்து போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடப்பாடி பழனிசாமியை பழிவாங்க முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ் என்ற முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார். ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
திமுக
எடப்பாடி பழனிசாமி
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்..!
Recommended image2
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு!
Recommended image3
திமுகவில் இணைகிறார் தர்மயுத்த நாயகன் ஓ.பன்னீர்செல்வம்..! கலகலக்கும் அரசியல் களம்
Related Stories
Recommended image1
இனி தவெகவினர் ஊடக விவாதங்களில் பங்கேற்க கூடாது.! புஸ்ஸி ஆனந்த் அதிரடி.. என்ன காரணம்?
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி! மூன்று நாட்கள் தொடர் விடுமுறை! குஷியில் அரசு ஊழியர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved