MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!

சங்கீதா முடிவின் பின்னணியில் அரசியல் சதி?.. விஜய்யை முடக்கும் 'மெகா' கட்சி?.. தவெகவினர் புலம்பல்!

இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம் என்றாலும், வரும் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என பலரும் நம்புவதால் அவரது இமேஜை காலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

2 Min read
Author : Rayar r
Published : Feb 27 2026, 06:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்யிடம் விவாகரத்து கேட்ட மனைவி
Image Credit : instagram

விஜய்யிடம் விவாகரத்து கேட்ட மனைவி

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். விஜய்க்கும் ஒரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளில் சுற்றியதாகவும் சங்கீதா தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளார். விஜய் அந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பது தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும், எவ்வளவோ சொல்லியும் திருமணத்துக்கு மீறிய உறவை விஜய் கைவிடவில்லை என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

24
விஜய்யின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
Image Credit : instagram

விஜய்யின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு

விஜய்க்கும், அந்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதனால் விஜய்யும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்வதாவும் கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், இதை உண்மை என அவரது மனைவியே நிரூபித்து விவாகரத்து கேட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், விஜய்யின் மனைவியே பெரும் குற்றம்சாட்டியுள்ளது திமுக, அதிமுக, நாதகவுக்கு லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது.

Related Articles

Related image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Related image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
34
மனைவியை காப்பாத்த முடியாதவர் பெண்களை எப்படி காப்பார்?
Image Credit : x

மனைவியை காப்பாத்த முடியாதவர் பெண்களை எப்படி காப்பார்?

இந்த விவகாரம் விஜய்யின் தனிப்பட்ட குடும்ப விஷயம் என்றாலும், வரும் தேர்தலில் பெரும் அரசியல் மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார் என பலரும் கூறுவதால் அவரது இமேஜை காலி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சுடச்சுட இந்த விஷயத்தை கையில் எடுத்த திமுக, அதிமுக மற்றும் நாதகவினர், ''ஒரு கட்சியின் தலைவரே இப்படி இருப்பதால் அந்த கட்சியின் லட்சணம் தெரிகிறது. தனது மனைவியை முடக்கி விட்டு தமிழக பெண்களை விஜய் எப்படி பாதுகாப்பார்?'' என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தனிப்பட்ட விஷயம்

இதுதான் சான்ஸ் என மேற்கண்ட 3 கட்சிகளும் விஜய்யை பொளந்து கட்ட ஆரம்பிக்க, தவெகவினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ''இது நடிகர், கட்சி தலைவர் என்பதை விட ஒரு நபரின் தனிப்பட்ட குடும்ப விஷயம். ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை பேசுவது வெட்கமாக இல்லையா?'' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

44
சங்கீதா முடிவுக்கு பின்னால் 'மெகா' கட்சி
Image Credit : Asianet News

சங்கீதா முடிவுக்கு பின்னால் 'மெகா' கட்சி

மேலும் ''விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரிந்து சங்கீதா விவாகரத்து கேட்டது அவர்களது குடும்ப விஷயம். தனிப்பட்ட விஷயம். ஆனால் இத்தனை நாட்கள் பொறுமையாக இருந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் சங்கீதா நீதிமன்றம் சென்றது ஏன்? 

இது சங்கீதாவே எடுத்த முடிவா? இல்லை விஜய்யின் இமேஜை காலி செய்ய 'மெகா' கட்சி தூண்டி விட்டு அவர் நீதிமன்றம் சென்றாரா? என்ற கேள்வி எழாமல் இல்லை. விஜய் மனைவி முடிவுக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்'' என்றும் தவெகவினர் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டிவி.கே. விஜய்
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இரண்டு வயது குழந்தையின் கூட பார்க்காமல்.. 40 வயது திமுக நிர்வாகி செய்த வேலை.! நடந்தது என்ன?
Recommended image2
Now Playing
காங்கிரஸ் உடனான சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை அறிவிக்கும் - முத்துசாமி பேட்டி
Recommended image3
இந்த 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. வெதர்மேன் குளு குளு அப்டேட்!
Related Stories
Recommended image1
விஜய்க்கு 'அந்த' நடிகையுடன் தொடர்பு.. வெளிப்படையாக போட்டுடைத்த மனைவி சங்கீதா.. மனுவில் பரபரப்பு தகவல்!
Recommended image2
ஷாக்கிங் நியூஸ் - முடிவுக்கு வரும் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை? சங்கீதா விஜய் விவாகரத்து மனு தாக்கல்! பிரிவுக்கான காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved