MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!

21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!

Dmk vs Congress: மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை சரமாரியாக விமர்சித்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தவெகவை வைத்து திமுகவை பயமுறுத்தியதும் அவருக்கு பிடிக்கவில்லை.

2 Min read
Author : Rayar r
Published : Feb 24 2026, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக‌
Image Credit : x

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய திமுக‌

தமிழக தேர்தல் திருவிழா நெருங்கி விட்டதால் ஆளும் கட்சியான திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்ப்பின்போது திமுகவின் கனிமொழி, காங்கிரசின் சிங் தியோ ஆகியோர் உடன் இருந்தனர்.

25
21 தொகுதிகள் தான் தர முடியும்
Image Credit : x

21 தொகுதிகள் தான் தர முடியும்

அப்போது காங்கிரஸ் தரப்பில் இருந்து 41 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். கூடுதலாக ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திமுக தரப்பு 'கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது. மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் சீட் கொடுக்க வேண்டியதுள்ளது. ஆகவே 21 தொகுதிகள் தர முடியும்' என்று கறாராக சொல்லி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் அதிருப்தியுடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Related image2
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
35
திமுகவுக்காக தியாகம் செய்யும் கூட்டணி கட்சிகள்
Image Credit : Asianet News

திமுகவுக்காக தியாகம் செய்யும் கூட்டணி கட்சிகள்

திமுகவை பொறுத்தவரை தனியாக 160 தொகுதிகளுக்கு மேல் நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. 'பாஜக கூட்டணியை வீழ்த்துவதே நமது இலக்கு. அதற்காக சில தொகுதிகளை தியாகம் செய்ய வேண்டும்' என கூட்டணி கட்சிகளிடம் தெரிவித்து விட்டது. இதை விசிக, இடது சாரிகள், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் காங்கிரஸ் மட்டும் பிடிவாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலில் 28 தொகுதிகள் கொடுக்க முன்வந்த திமுக‌

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இத்துடன் சேர்த்து 3 தொகுதிகள் கூடுதலாக கொடுக்கலாம் என திமுக தரப்பு முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் என்பது மட்டுமின்றி ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு கேட்டது திமுகவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

45
முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி
Image Credit : Google

முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி

மேலும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திமுகவை சரமாரியாக விமர்சித்தது ஸ்டாலினுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தவெகவை வைத்து திமுகவை பயமுறுத்தியதும் அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவுப்படுத்திய ஸ்டாலின், மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அடுத்த பேச்சுவார்த்தை என உறுதியாக காங்கிரசிடம் கூறியிருந்தார்.

55
தேமுதிக இருக்கும்போது காங்கிரஸ் எதற்கு?
Image Credit : X/Twitter

தேமுதிக இருக்கும்போது காங்கிரஸ் எதற்கு?

ஆனால் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்காத காங்கிரஸ், அவரது வாய்க்கு பூட்டு போட்டு ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என இறங்கி வந்தது. எனினும் 21 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி தர முடியாது. ராஜ்ய சபா சீட்டும் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ள திமுக, 'விருப்பம் இருந்தால் கூட்டணியில் இருங்கள். இல்லாவிடில் வெளியேறுங்கள்' என்ற முடிவுக்கு வந்து விட்டதாம்.

 தேமுதிக கூட்டணிக்கு வந்து விட்டதால் இனி காங்கிரஸ் தேவையில்லை என திமுக நினைக்க ஆரம்பித்து விட்டதாகவும், கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக் கொண்டு திமுகவுடன் காங்கிரஸ் இருக்குமா? இல்லை தவெகவுடன் செல்லுமா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்தல்
தமிழ்நாடு
மு. க. ஸ்டாலின்
திமுக
இந்திய தேசிய காங்கிரஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.70,000 ஊக்கத்தொகை முதல் ஒரு லட்சம் பரிசுத் தொகை வரை.! லிஸ்ட் போட்ட தமிழக அரசு
Recommended image2
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.. புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்..! முதல்வர் பெருமிதம்
Recommended image3
வெயிலின் ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சு! இனிமே குடை இல்லாமல் வெளியே போவாதீங்க! மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
ஆட்சியில் பங்கு கேட்கவில்லை.. அந்தர்பல்டி அடித்த காங்கிரஸ்.. மாணிக்கம் தாகூருக்கு வார்னிங்!
Recommended image2
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved