- Home
- Tamil Nadu News
- முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Vijay Emotional in Vellore: தவெக தலைவர் விஜய் வேலூரில் பேசும்போது மேடையில் கண்கலங்கினர். தவெகவினர் இதைப் பார்த்து துடித்துப் போயினர். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

வேலூரில் தவெக தலைவர் விஜய் பேச்சு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுகவுக்கு கடும் போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்படும் நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் பம்பரமாக சுழன்று வருகிறது. தவெக தலைவர் விஜய்யும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் வெயிலுக்கு பெயர்போன வேலூரில் இன்று (பிப்ரவரி 23) பிரசாரம் செய்த விஜய், வேலூர் வெயிலை விட கொதித்தெழுந்து வழக்கம்போல் திமுகவை கடுமையாக தாக்கி பேசினார்.
திமுக மீது அட்டாக்
திமுக ஆட்சி ஊழலில் திளைக்கிறது. சட்டம், ஒழுங்கு மறைந்து ரொம்ப நாளாகி விட்டது; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விஜய் தாக்கி பேசினார். வேலூரில் ஒருபக்கம் ஆவேசமாக பேசிய விஜய், மறுபக்கம் மேடையிலேயே கண்கலங்கினார்.
அதாவது மேடையில் பேசிய விஜய், ''உங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான் என்று நம்முடைய எதிரிகளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நமக்கு எதிராக நிறைய அவதூறுகள் பரப்புகிறார்கள். என் மீது அவதூறு பரப்பினால் அது மக்கள் மீது அவதூறு பரப்புகிற மாதிரி.
மேடையில் கண்கலங்கிய விஜய்
எனக்கு அரசியல் தெரியவில்லை என்று சொன்னால் அது மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்கிற மாதிரி. என்னை அசிங்கம் அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்கம் அசிங்கமாக பேசுகிற மாதிரி. எனக்கு எதிராக ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிராக செய்யும் செயல் என அவங்களுக்கு தெரியாமல் போய் விட்டது.
இந்த விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜய்யும், மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி. உடலும் உயிரும் மாதிரி. ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்கவே முடியாது. இது சென்சிடிவான சென்டிமென்ட்'' என்று கூறி அப்படியே கண் கலங்கினார். இதைப்பார்த்தும் தவெகவினர் உணர்ச்சிவசப்பட்டனர்.
விஜய் கண்கலங்கியது ஏன்?
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், அதற்கு அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இதை மனதில் வைத்தே, 'என்னை அசிங்கம் அசிங்கமாக பேசுகிறார்கள்' என விஜய் பேசியதாக கூறப்படுகிறது. பொதுவாக உணர்ச்சிகள், சென்டிமென்ட்கள் மக்களின் கவனத்தை விரைவாக ஈர்த்து விடும்.
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்
இதனால் அரசியலில் ஊறிப்போன சில தலைவர்கள் தொண்டர்கள் முன்பு, மக்கள் கண் கலங்குவது அவ்வப்போது நடந்து வரும். இன்று விஜய் 'தன்னை அனைவரும் அவதூறாக பேசுகிறார்கள்' என்று கூறியபடி கண் கலங்கியதை பார்த்த சிலர் முழு நேர அரசியல்வாதியாக மாறும் தகுதி விஜய்க்கு வந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

