MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..

1000, 2000 இல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10000..! பழனிசாமி ஜாக்பாட் அறிவிப்பு..

அதிமுக ஆட்சி அமைத்ததும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

1 Min read
Author : Velmurugan s
Published : Feb 24 2026, 12:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஜெயலலிதா பிறந்த நாள் விழா
Image Credit : ADMK

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து அதிமுக 3ம் கட்ட தேர்தல் வாக்குறுதியாக சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

24
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10000
Image Credit : X/@EPSTamilNadu

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10000

அந்த வகையில், “ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும்.

ஆண்டு தோறும் பொங்கல் பரிசு.. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும்.

கடன் தள்ளுபடி.. நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுள்ள கடன் தொகை முழுமையாக ரத்து செய்யப்படும்.

Related Articles

Related image1
தொட்டுப்பார்... சீண்டிப் பார் சவால் என்னாச்சு ஸ்டாலின்..? அம்பலப்படும் உதயநிதி..! அதிமுக சவால்..!
Related image2
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
34
பட்டதாரிகளுக்கு ரூ.2000
Image Credit : our own

பட்டதாரிகளுக்கு ரூ.2000

மாணவர்களுக்கு ரூ.2000.. பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும். அதே போன்று 12ம் வகுப்பு முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

44
மீனவர்களுக்கு ரூ.12000
Image Credit : Asianet News

மீனவர்களுக்கு ரூ.12000

மின்சார மானியம்.. தற்போது தமிழகம் முழுவதும் கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இது அதிமுக ஆட்சியில் 450 யூனிட்டாக உயர்த்தப்படும். இதே போன்று விசைத்தறி நெசவாளர்களுக்கு 1000 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இது அதிமுக ஆட்சி அமைந்ததும் 1400 யூனிட்டாக உயர்த்தப்படும்.

மீனவர்களுக்கு ரூ.12000.. மீன்பிடி தடைக் காலத்தில் வேலை இல்லாமல் காத்திருக்கும் மீனவர்களுக்கு தற்போது ரூ.8000 வழங்கப்படுகிறது. இது அதிமுக ஆட்சி அமைந்ததும் ரூ.12000ஆக உயர்த்தப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாடு அரசு
அதிமுக பாஜக கூட்டணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தவெக கூறுவது அத்தனையும் பொய்! விதியை மீறிய விஜய் மீது நடவடிக்கையா? உண்மையை புட்டு புட்டு வைத்த காவல்துறை
Recommended image2
தோழர் நல்லக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு..! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு
Recommended image3
1.5 லட்சம் பேர் கலந்த திருமணம்.. 6 முறை ஆட்சி செய்த இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் மறுபக்கங்கள்
Related Stories
Recommended image1
தொட்டுப்பார்... சீண்டிப் பார் சவால் என்னாச்சு ஸ்டாலின்..? அம்பலப்படும் உதயநிதி..! அதிமுக சவால்..!
Recommended image2
இது பட்ஜெட் இல்லை.. மாபெரும் காது குத்தும் விழா..! திமுக அரசை பத்திரிகை அடித்து கலாய்த்த அதிமுக
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved