MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Politics
  • தொட்டுப்பார்... சீண்டிப் பார் சவால் என்னாச்சு ஸ்டாலின்..? அம்பலப்படும் உதயநிதி..! அதிமுக சவால்..!

தொட்டுப்பார்... சீண்டிப் பார் சவால் என்னாச்சு ஸ்டாலின்..? அம்பலப்படும் உதயநிதி..! அதிமுக சவால்..!

செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தன் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே?!

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 21 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை சமீபத்தில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 2,538 பணியிடங்களில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை கூறுகிறது. இதில் ரூ.888 கோடி முதல் ரூ.1,020 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டி அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அமலாக்கத்துறை தமிழக டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மூன்று முறை விரிவான ஆதாரங்களுடன் கடிதங்கள் அனுப்பியது. டிஜிட்டல் ஆதாரங்கள், லெட்ஜர், ஹவாலா பரிவர்த்தனைகள் போன்றவை உள்ளதாகக் கூறப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Image Credit : F/KN Nehru

நேற்று அதிமுக எம்.பி., ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வு அமலாக்கத்துறை அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. "விரிவான ஆதாரங்கள் உள்ளன. குற்றச் செயல் நிகழ்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. தாமதம் செய்ய இடமில்லை" என நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. இது தேர்தல் நேரத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Related image1
ரஜினி - கமல் நடிப்பில் அனல்பறக்கும் புரோமோ... நெல்சன் வைத்த அடிபொலி ட்விஸ்ட் - யார் ஹீரோ?
34
Image Credit : GOOGLE

இது குறித்து அதிமுக தரப்பில், ‘‘அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக்கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக பொறுப்பு டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில், பக்கம் 51-ல்,

டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது" பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

தனது அமைச்சரைக் காப்பாற்றத் தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள். ‘தியாகி’ பாலாஜிக்காக வந்த "தொட்டுப் பார், சீண்டிப் பார்" வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா?

44
Image Credit : our own

செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தன் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே?!

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்! இன்னும் இரண்டே மாதங்கள் தான். அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா ஃபைல்ஸும் திறக்கப்படும். முகத்திரைகள் கிழிக்கப்படும். இது உறுதி’’ என அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
Recommended image2
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?
Recommended image3
கூட்டணிக்கு பெயர் வச்சாச்சு.. ஆனா பிரதமர் வேட்பாளர் யாரு? விஜய்யா? ராகுலா? தவெக-காங்கிரஸ் மோதல் உச்சம்!
Related Stories
Recommended image1
ரஜினி - கமல் நடிப்பில் அனல்பறக்கும் புரோமோ... நெல்சன் வைத்த அடிபொலி ட்விஸ்ட் - யார் ஹீரோ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved