- Home
- உடல்நலம்
- Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்
Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்
குளிர்காலத்தில் பச்சை பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
14

Image Credit : Getty
Benefits of Green Peas
குளிர்காலத்தில் எளிதில் கிடைக்கும் பட்டாணி புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைந்த சூப்பர்ஃபுட். இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை ஆதரித்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
24
Image Credit : Getty
பச்சை பட்டாணியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்
பட்டாணியில் வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் நிறைந்துள்ளன. இதில் அதிக புரதம் இருப்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.
34
Image Credit : Getty
பச்சை பட்டாணி ஆரோக்கிய நன்மைகள்
- பச்சை பட்டாணியில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன. அவை உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
- இதில் நிறைந்திருக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது குறிப்பாக வயதாகும் போது எலும்புகள் பலவீனமடைவதைத் தடுக்க உதவும்.
- இதய நோய், பக்கவாதம் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- பச்சை பட்டாணியில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது.
- நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வயிறை நீண்ட நேரம் விரிவாக வைத்திருக்கும், திருப்தி உணர்வை தருகிறது. இதனால் தேவையற்ற உணவுகள் சாப்பிடுவதை தடுக்கப்படுவதால் ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
44
Image Credit : GEMENI AI
பச்சை பட்டாணியை எப்படி சாப்பிட வேண்டும்?
பட்டாணியை 5-6 நிமிடங்கள் வேகவைத்து, வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம். குறைந்த எண்ணெயில் வதக்கியோ அல்லது குழம்புகளில் சேர்த்தோ சாப்பிடலாம்.
Latest Videos

