- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் தொடங்கியுள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் நிலையில், சஞ்சு சாம்சன் உள்பட 4 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் ஒருமுறை டாஸில் தோற்றுள்ளார்.
இந்திய அணியில் 4 பேர் நீக்கம்
இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். நம்பர் 1 பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் காயத்தில் இருந்து குணமடைந்த சுப்மன் கில்லும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதே வேளையில் இந்திய அணியில் இருந்து 4 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணாவுக்கு அணியில் இடமில்லை.
சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் நீக்கம்
மேலும் சிறந்த பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை. அதே வேளையில் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிவுக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அர்ஷ்தீப் சிங்.
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்கா அணி பிளேயிங் லெவன்: எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், டோனி டி சோர்சி, டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன், கார்பின் போஷ், கேசவ் மகாராஜ், லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்க்யா

