- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND vs SA 1st T20 Playing 11: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங், போட்டி நடக்கும் கட்டாக் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்டவை குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை இந்தியாவும் வென்று விட்டன. அடுத்ததாக இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி நாளை (டிசம்பர் 9) கட்டாக்கில் நடைபெற உள்ளது. ஓடிஐ தொடரை வென்றது போல் டி20 தொடரையும் வெல்ல வேண்டும் என்பதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது.
சுப்மன் கில் களமிறங்குவார்
டி20 தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சுப்மன் கில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து அணியினருடன் இணைந்து விட்டதால் முதலாவது போட்டியில் விளையாடுவது உறுதியாகி விட்டது. முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை பார்த்தால் பாஸ்ட் பவுலர்களை விட கூடுதல் ஸ்பின்னர்கள் இடம்பெறுவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்ட்யா கம்பேக்
அதாவது ஓப்பனிங்கில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்குவார்கள். ஒன்டவுனில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களம் காண்பார். மிடில் வரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரும், பின் வரிசையில் ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் ஆகியோரும் பேட்டிங் செய்ய உள்ளனர்.
ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை அக்சர் படேல், குல்தீப் யாதவ், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியும், பாஸ்ட் பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் இவர்களின் உதவிக்கு ஹர்திக் பாண்ட்யா இருப்பார்கள்.
ஹர்சித் ராணா அதிரடி நீக்கம்
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா மற்றும் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பில்லை. ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளது மீடியம் பாஸ்ட் பவுலிங் மற்றும் மிடில் வரிசை பேட்டிங் ஆகியவற்றை பலப்படுத்தியுள்ளது.
டி20யில் யார் ஆதிக்கம்? கட்டாக் பிட்ச் எப்படி?
இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி 18 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. போட்டி நடக்கும் கட்டாக் பராபதி மைதானத்தின் பிட்ச்சை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுக்கும் ஒத்துழைக்கும்.
முதலில் பந்து நன்றாக பேட்டுக்கு வரும். பின்பு பிட்ச் முழுமையாக ஸ்பினுக்கு கைகொடுக்கும். இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் அது வெற்றி ஸ்கோராக இருக்கும். ஆனால் பனிப்பொழிவை பொறுத்து இது மாறுபடலாம்.
இந்திய அணி பிளேயிங் லெவன்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி

