- Home
- Sports
- Sports Cricket
- தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!
தந்தையின் இறுதி சடங்கு முடித்த கையோடு கண்ணீருடன் களத்தில் இறங்கும் சிங்கம்! கலங்க வைக்கும் அர்ப்பணிப்பு!
டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முக்கியப் போட்டிக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில் தந்தையின் இறுதி சடங்கை முடித்து கொண்டு ரிங்கு சிங் அணிக்கு திரும்புகிறார்.

சோகத்தில் இருந்து களத்திற்கு.. ரிங்கு சிங் வருகையால் அணிக்கு பலம்
ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 போட்டிக்கு முன், தந்தையின் இறுதி சடங்கை முடித்துக் கொண்டு ரிங்கு சிங் இப்போது அணிக்கு திரும்பியுள்ளார். பிசிசிஐ இதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
தந்தையின் மரணம்.. சோகத்தில் ரிங்கு சிங்
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்த் சிங் காலமானார். இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ரிங்கு சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அறிவிப்பு
ரிங்கு சிங் சனிக்கிழமை கொல்கத்தாவில் அணியுடன் இணைவார் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்திருந்தார். தந்தையின் மறைவுக்கு மத்தியிலும் அவர் அணிக்கு திரும்புவது பாராட்டப்படுகிறது.
ரிங்கு சிங்..
ரிங்கு சிங்கின் குடும்பத்திற்கு உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்து, தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
உலகக் கோப்பையில் ரிங்கு சிங்கின் ஃபார்ம்
நடப்பு டி20 உலகக் கோப்பையில் ரிங்கு சிங் எதிர்பார்த்தபடி சோபிக்கவில்லை. இருப்பினும், ஒரு சிறந்த ஃபினிஷராக அவரது திறமை மீது அணி நிர்வாகம் நம்பிக்கை வைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸுடன் வாழ்வா சாவா போட்டி
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டி ஒரு நாக்-அவுட் போட்டியாக மாறியுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். ரிங்கு சிங்கின் வருகை மிடில் ஆர்டரை பலப்படுத்தும்.