- Home
- Sports
- Sports Cricket
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
IND vs SA T20 2025: இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடர்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி விட்டது. இதில் டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவும், ஒருநாள் தொடரில் இந்தியாவும் வெற்றி பெற்று விட்டன. அடுத்ததாக இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன.
டி20 தொடர் அட்டவணை
இதில் முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் டிசம்பர் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது 2வது டி20 போட்டி 11ம் தேதி (வியாழக்கிழமை) நியூ சண்டிகரிலும், 3வது போட்டி 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தரம்சாலாவிலும், 4வது போட்டி 17ம் தேதி (புதன்கிழமை) லக்னோவிலும், 5வது போட்டி 19ம் தேதி (வெள்ளிக்கிழமை) அகமதாபாத்திலும் நடைபெற உள்ளன.
எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டி தொடங்கும் நேரம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையிலான டி20 தொடருக்கான போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் தமிழ் வர்னணையுடன் போட்டிகளை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன?
இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும். போட்டி தொடங்கும் அரை மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது 6.30 மணிக்கு டாஸ் போடப்படும்.
தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி
தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா

