- Home
- Sports
- Sports Cricket
- IND vs SA T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஹர்திக் பாண்ட்யா கம்பேக்! 2 அதிரடி வீரர்கள் நீக்கம்!
IND vs SA T20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஹர்திக் பாண்ட்யா கம்பேக்! 2 அதிரடி வீரர்கள் நீக்கம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். 2 அதிரடி வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா VS தென்னாப்பிரிக்கா டி20 தொடர்
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகின்றன.
முதலாவது டி20 போட்டி கட்டாக்கில் டிசம்பர் 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கட்டாக்கில் நடைபெற உள்ளது. 2வது டி20 போட்டி 11ம் தேதி நியூ சண்டிகரிலும், 3வது போட்டி 14ம் தேதி தரம்சாலாவிலும், 4வது போட்டி 17ம் தேதி லக்னோவிலும், 5வது போட்டி 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
ஹர்திக் பாண்ட்யா கம்பேக்
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கபப்ட்டுள்ளார். காயம் காரணமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடாத சுப்மன் கில் துணை கேப்டனாக டி20 அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ரிஷப் பண்ட், ரிங்கு சிங் நீக்கம்
தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி அணியில் இடம் பெற்றுள்ளனர். சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜிதேஷ் சர்மாவுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டுக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் இளம் அதிரடி வீரர் ரிங்கு சிங்கும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியளர் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணா அணியில் இடம்பெற்றுள்ளார்.
SA T20 தொடருக்கான இந்திய அணி
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா

