- Home
- Sports
- Sports Cricket
- 2nd ODI: கிங் கோலி மேஜிக் சதம்.. ருத்ராஜ் கன்னி சதம்.. SA-க்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!
2nd ODI: கிங் கோலி மேஜிக் சதம்.. ருத்ராஜ் கன்னி சதம்.. SA-க்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கிங் விராட் கோலி, ருத்ராஜ் கெய்க்வாட் சூப்பர் சதத்துடன் இந்திய அணி 358 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுலும் அரை சதம் அடித்து அசத்தினார்.

இந்தியா VS தென்னாப்பிரிக்கா 2வது ஓடிஐ
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடந்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தொடக்கத்தில் ரோகித் சர்மா (14 ரன்), ஜெய்ஸ்வால் (22) ஆகியோரின் விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. அப்போது 10 ஓவரில் 62/2 என்ற நிலையில் இருந்தது.
விராட் கோலி, ருத்ராஜ் அதிரடி ஆட்டம்
பின்பு ஜோடி சேர்ந்த ருத்ராஜ் கெய்க்வாட்டும், விராட் கோலியும் தென்னாப்பிரிக்கா பவுலர்களை சிதறடித்து அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினார்கள். ருத்ராஜ் ஸ்பின் பவுலிங், பாஸ்ட் பவுலிங்கில் நேர்த்தியான கிளாசிக் ஷாட்களை விளாச, மறுபுறம் கிங் கோலி தனது டிரேட் மார்க் ஷாட்களை அடித்து பவுண்டரிகளை ஓட விட்டார். இருவரும் வேகமாக ஓடி ஒன்றிரண்டு ரன்களை சேர்த்தனர்.
ருத்ராஜ், கிங் கோலி சூப்பர் சதம்
அட்டகாசமாக விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் ஒருநாள் போட்டிய்ல் தனது முதல் சதத்தை விளாசினார். 77 பந்துகளில் அடித்த ருத்ராஜ் 12 பவுண்டரி, 2 சிக்சர்களை பறக்க விட்டார். பின்பு சதம் அடித்த உடன் அவர் 83 பந்தில் 105 ரன் எடுத்து அவுட் ஆனார்.
மறுமுனையில் சூப்பராக விளையாடிய விராட் கோலி 90 பந்துகளில் தனது 53வது ஓடிஐ சதம் அடித்து அசத்தியுள்ளார். 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் விராட் விளாசியுள்ளார். தொடர்ந்து அவர் 93 பந்தில் 102 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார். இருவரும் ஜோடியாக 170 ரன்களுக்கு மேல் அடித்தனர்.
இந்திய அணி ரன்கள் குவிப்பு
இதன்பின்பு வந்த வாஷிங்டன் சுந்தர் (1) தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். கடைசியில் ரன் வேகம் சற்று தளர்ந்த நிலையில், கேப்டன் கே.எல்.ராகுல் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசி
சூப்பர் அரை சதம் அடித்து ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 43 பந்தில் 6 பவுண்டரி, சிக்சர்களுடன் 66 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 27 பந்தில் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
20 வைடுகளை வீசிய தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்கா தரப்பில் யான்சன் 2 விக்கெட்டுகளையும், பர்கர், லுங்கி இங்கிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். தெனனாப்பிரிக்கா பவுலர்கள் எக்ஸ்டிரா வகையில் 24 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். இதில் 20 வைடுகள் வீசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

