- Home
- Sports
- Sports Cricket
- ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்.. SA பவுலர்களை கதற விட்ட சிஎஸ்கே கேப்டன்! 'கன்னி' சதம் விளாசி அசத்தல்!
ருத்ரதாண்டவமாடிய ருத்ராஜ்.. SA பவுலர்களை கதற விட்ட சிஎஸ்கே கேப்டன்! 'கன்னி' சதம் விளாசி அசத்தல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் அதிரடி சதம் விளாசி அசத்தியுள்ளார். சிஎஸ்கே கேப்டானான ருத்ராஜ் சதத்தை சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ருத்ராஜ் கெய்க்வாட் சதம்
ராய்ப்பூரில் நடந்து வரும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் தனது முதல் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி கேப்டனாக இருக்கும் ருத்ராஜ் வெறும் 77 பந்துகளில் சதம் அடித்தார். ஸ்பின் மற்றும் பாஸ்ட் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்ட ருத்ராஜ் அட்டகாசமான ஷாட்கள் மூலம் 11 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் தனது சதத்தை நொறுக்கியுள்ளார். பின்பு 83 பந்தில் 105 ரன்கள் அடித்து அவர் அவுட் ஆனார்.
திறமையை நிரூபித்த சிஎஸ்கே கேப்டன்
முதல் ஓடிஐயில் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த ருத்ராஜ், 2வது ஓடிஐயில் தனது திறமை என்ன என்பதை நிரூபித்துள்ளார். மற்றொருபுறம் முதல் ஓடிஐபோல் அசத்தலாக விளையாடி வரும் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சதத்தை நெருங்கி வருகிறார்.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி தாங்கள் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதன்பேரில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில், ரோகித் சர்மா 14 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த ருத்ராஜ் கெய்க்வாட்டும், விராட் கோலியும் சூப்பராக விளையாடி அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு கொண்டு வந்தனர்.
ருத்ராஜ் கெய்வாட்டுக்கு சிஎஸ்கே வாழ்த்து
ருத்ராஜ் கெய்வாட் சூப்பர் சதம் அடித்த நிலையில், சிஎஸ்கே எக்ஸ் தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளது. ''ருத்ராஜை நேசித்த அனைவருக்கும், உடன் இருந்து, துணை நின்று, உறுதுணையாக நின்றவர்களுக்கும் இந்த சதம், நீங்கள் ஆவலோடு காத்திருந்த வெற்றி முழக்கம். ருத்ராஜ் சிறு பொறியில் இருந்து பெருந்தீயாக உருவெடுத்துள்ளார்'' என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது. ருத்ராஜுக்கு இந்திய அணி ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

