MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?

தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?

கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 17 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா ரெடி
Image Credit : Google

ஐபிஎல் 2026 கிரிக்கெட் திருவிழா ரெடி

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐபிஎல் 2026 தொடர் மார்ச் 28ம் தேதி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளது. 2026 ஐபிஎல் தொடரை தங்களுக்கு பிடித்தமான அணி தான் கைப்பற்றும் என ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஐபிஎல் தொடர்களில் தொடர்ந்து சிறந்த அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தோனி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்
Image Credit : our own

தோனி ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வம்

மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை அணி 5 முறை ஐபில் கோப்பையை கையில் ஏந்தியுள்ள நிலையில், இந்த முறையும் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கேற்ப சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் உள்ளது. மேலும் 44 வயதான தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என கருதப்படுவதால் தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ரெடியாக உள்ளனர்.

35
தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மோதல்
Image Credit : Getty

தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் மோதல்

இந்த நிலையில், கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனிக்கும், சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தோனியின் தளபதியாக, பல ஆண்டுகளாக சிஎஸ்கேவின் துருப்பு சீட்டாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு அனுப்பி விட்டு அங்கு இருந்து சஞ்சு சாம்சனை சென்னைக்கு கொண்டு வந்தது சிஎஸ்கே நிர்வாகம். தன்னுடைய இடத்துக்கு சரியான நபர் சஞ்சு சாம்சன் என கணித்த தோனி இது குறித்து சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேசியுள்ளார்.

45
தளபதி ஜடேஜாவுக்காக மன்றாடிய தோனி
Image Credit : Twitter

தளபதி ஜடேஜாவுக்காக மன்றாடிய தோனி

அதன்படி சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்குள் கொண்டு வரப்பட்டார். ஆனால் ஜடேஜாவை சிஎஸ்கேவில் இருந்து வெளியேற்ற தோனிக்கு துளி கூட விருப்பம் இல்லையாம். முக்கிய வீரரான ஜடேஜாவை மாற்ற வேண்டாம் என தோனி சொல்லியும் சிஎஸ்கே நிர்வாகம் வெளியேற்றதால் அவர் கடும் கோபம் அடைந்துள்ளாராம். இது குறித்து தோனி சிஎஸ்கே தலைமையிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

55
தோனிக்கு சிஎஸ்கே போட்ட கண்டிஷன்
Image Credit : our own

தோனிக்கு சிஎஸ்கே போட்ட கண்டிஷன்

இது தவிர, 'நீங்கள் ஐபிஎல் 2026 தொடரில் கடைசியில் இறங்குவதற்கு பதிலாக கொஞ்சம் முன்வரிசையில் வந்து பேட்டிங் செய்ய வேண்டும்' என தோனியியிடம் சிஎஸ்கே நிர்வாகம் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் கோபம் அடைந்த தோனி, ''நான் கடைசியில் தான் பேட்டிங் செய்வேன். அதுவும் கடைசி நான்கு ஓவரில் ஓவருக்கு 15 ரன்களுக்கு மேல் தேவை இருந்தால் தான் களமிறங்குவேன்'' என கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

விளையாட முடியாது என தெரிவித்த தோனி

மிக முக்கியமாக, சிஎஸ்கே மீதான அதிருப்தியால் தோனி ஐபிஎல் 2026ல் விளையாட மாட்டேன் என தெரிவித்து விட்டதாகவும், சிஎஸ்கே அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் இதுதான் என கிரிக்கெட் நிபுணர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சிஎஸ்கே
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
ஐபிஎல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
KL Rahul: இந்தியாவின் நியூ ரன் மெஷின்.. ஒரே சதத்தில் பல சாதனைகளை தகர்த்த கே.எல்.ராகுல்!
Recommended image2
IND vs PAK: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. சுந்தருக்கு ரூ.75 லட்சம் பரிசு..
Recommended image3
இந்திய அணியின் டாப் ஸ்பின்னர் திடீர் ஓய்வு.. இன்ஸ்டாவில் உருக்கம்.. ரசிகர்கள் ஷாக்!
Related Stories
Recommended image1
வார்த்தைகளே தேவையில்லை... பும்ரா ஒரு 'சாம்பியன்'.. தல தோனி பூரிப்பு
Recommended image2
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved