MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?

IPL: கம்மின்ஸுக்கு என்னாச்சு? SRH கேப்டனானார் இஷான் கிஷன்.. அட! துணை கேப்டன் இவரா?

2026 ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தனது தற்காலிக கேப்டன் மற்றும் துணை கேப்டனை அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இங்கே பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Mar 18 2026, 10:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன்
Image Credit : Getty

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் இஷான் கிஷன்

ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ், 2026 ஐபிஎல் தொடரின் ஆரம்பப் போட்டிகளில் விளையாடமாட்டார். அதனால், அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்துவார் என சன்ரைசர்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், முதுகு வலிப் பிரச்சனையிலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
முதுகு வலியால் அவதிப்படும் கம்மின்ஸ்
Image Credit : ANI

முதுகு வலியால் அவதிப்படும் கம்மின்ஸ்

பேட் கம்மின்ஸ் அணிக்குத் திரும்பும் வரை, இஷான் கிஷன் கேப்டனாகவும், அபிஷேக் சர்மா துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். கம்மின்ஸ் முழு உடற்தகுதியுடன் வந்தவுடன், அவரே கேப்டனாகத் தொடர்வார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, பேட் கம்மின்ஸ் முதல் மூன்று போட்டிகளில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

Related Articles

Related image1
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
Related image2
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
34
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டிகள்
Image Credit : insta

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டிகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மார்ச் 28 அன்று நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஏப்ரல் 5-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுடன் மோதவுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 30 போட்டிகளில் விளையாடி, 15-ல் வெற்றியும் 14-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. 2024 ஐபிஎல் தொடரில், கம்மின்ஸ் தலைமையில்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

44
இஷான் கிஷன் தலைமை எப்படி இருக்கும்?
Image Credit : ANI

இஷான் கிஷன் தலைமை எப்படி இருக்கும்?

நூற்றுக்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன், தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். சையத் முஷ்டாக் அலி கோப்பையில், ஜார்கண்ட் அணியை முதல் முறையாக சாம்பியன் பட்டத்திற்கு வழிநடத்தினார். இப்போது, இவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எப்படிச் செயல்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Grok AI Prediction: ஐபிஎல் 2026 கோப்பையை வெல்லும் அணி இதுதான்! க்ரோக் AI அதிர்ச்சி கணிப்பு!
Recommended image2
Vaibhav Suryavanshi: ஆத்தாடி! 15 வயதில் இத்தனை கோடிகள் சொத்தா? சொத்து மதிப்பிலும் சிக்சர் அடிக்கும் வைபவ் சூர்யவன்ஷி!
Recommended image3
Kavya Maran: மைதானத்திலேயே அழுத காவ்யா மாறன்... நொறுங்கிப்போன ஆரஞ்சு ஆர்மி..! வைரல் வீடியோ
Related Stories
Recommended image1
7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
Recommended image2
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved