MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

7 டூ 8.. ஜெர்சி நம்பரை திடீரென மாற்றிய 'தல' தோனி! பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

தோனி சர்வதேச போட்டிகளிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி 7ம் எண் ஜெர்சியை அணிந்து தான் பல சாதனைகளை படைத்துள்ளார். தான் பிறந்த தேதி 7 என்பதால் இந்த நம்பரை தேர்வு செய்ததாக தோனி அடிக்கடி கூறியுள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : Mar 17 2026, 09:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கூல் கேப்டன் தோனி
Image Credit : Asianet News

கூல் கேப்டன் தோனி

கிரிக்கெட் உலகில் 'கூல் கேப்டன்' என்று அழைக்கப்படும் தல தோனி படைக்காத சாதனைகளே இல்லை. இந்திய அணிக்காக மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், ஐபிஎல்லில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என தோனியின் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கேப்டன்சியில் மட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் பல சாதனைகளை படைத்த தோனி, ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே அணிக்காக களமிறங்க ஆயத்தமாக உள்ளார்.

25
ஜெர்சி எண் 7ல் இருந்து 8க்கு மாறிய தோனி
Image Credit : our own

ஜெர்சி எண் 7ல் இருந்து 8க்கு மாறிய தோனி

44 வயதாகி விட்டதால் இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் என கூறப்படும் நிலையில், அவரின் அதிரடியை காண ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தோனி தனது டிரேட் ஜெர்சி நம்பர் 7ஐ மாற்றி விட்டு 8ம் எண் கொண்ட ஜெர்சியை அணியப்போவதாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக பேக்ஸ்புக் பக்கத்தில், ''சில எண்கள் நம்முடன் எப்போதும் நிலைத்திருக்கும். 7 எனக்கு அப்படிப்பட்ட ஒரு எண் தான். ஆனால் இன்று, நான் 8-க்கு மாறுகிறேன். அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியும்'' என்று ட்விஸ்ட் வைத்துள்ளார்.

Related Articles

Related image1
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Related image2
CSK SWOT Analysis: 6-வது முறையா கோப்பையை அடிக்குமா சிஎஸ்கே? முழு பலம், பலவீனம் இதோ!
35
ஜெர்சி எண்ணை மாற்றியது ஏன்?
Image Credit : Getty

ஜெர்சி எண்ணை மாற்றியது ஏன்?

இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவி வரும் நிலையில், 'தோனி தனது ராசியான 7ம் நம்பரை மாற்ற மாட்டார். இது ஏதேனும் ஒரு புதிய பிராண்ட் அல்லது விளம்பரத்திற்கான புரமோஷன் ஆக இருக்கலாம். ஐபிஎல் தொடங்கும் சமயத்தில் அவர் இது போன்ற சுவாரசியமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம்'' என்று அவரது கூறி வருகின்றனர். தோனி கடந்த ஐபிஎஇல் சீசன்களில் பெரும்பாலும் 8வ‌து இடத்தில் பேட்டிங் செய்கிறார். இதை கிண்டலாக சுட்டிக்காட்டும் வகையில் இப்படி செய்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

45
எண் கணித அடிப்படையா? ஜடேஜாவுக்கு மரியாதையா?
Image Credit : our own

எண் கணித அடிப்படையா? ஜடேஜாவுக்கு மரியாதையா?

அதே வேளையில் சிஎஸ்கே அணியில் ஜெர்சி எண் 8 ரவீந்திர ஜடேஜா உடையது ஆகும். ஏற்கெனவே ஜடேஜாவை சிஸ்கேவில் தோனி தக்க வைக்க முயன்றும் அது நடக்காததால் ஜடேஜாவை முன்னிலைப்படுத்தும் வகையில் தோனி ஜெர்சி எண்ணை மாற்றி இருக்கலாம் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் எண் கணித நிபுணர்கள் சிலர் சிஎஸ்கே இந்த முறை கோப்பையை வெல்வதற்காக எண் கணித அடிப்படையில் 8ம் எண்ணுக்கு மாறியிருக்கலாம் எனவும் கொளுத்தி போடுகின்றனர்.

55
சிஎஸ்கே போட்டியில் விடை தெரியும்
Image Credit : our own

சிஎஸ்கே போட்டியில் விடை தெரியும்

தோனி சர்வதேச போட்டிகளிலும் சரி, ஐபிஎல்லிலும் சரி 7ம் எண் ஜெர்சியை அணிந்து தான் பல சாதனைகளை படைத்துள்ளார். தான் பிறந்த தேதி 7 என்பதால் இந்த நம்பரை தேர்வு செய்ததாக தோனி அடிக்கடி கூறியுள்ளார். இப்படி இருக்கும்போது தோனி எதற்காக திடீரென ஜெர்சி எண்ணை மாற்றினார் என தெரியவில்லை. அவர் உண்மையிலேயே 8ம் எண்ணுக்கு மாறி விட்டாரா? இல்லை இது விளம்பர யுக்தியா? என்பது தோனி களத்தில் விளையாடும்போது தான் தெரியவரும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
சிஎஸ்கே
ஐபிஎல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Recommended image2
சென்டிமென்ட்க்கு இடமில்லை.. இனி அதிரடி சரவெடி தான்..! ராஜஸ்தானுக்கு எதிரான சேட்டனின் ஸ்ட்ராங் ஸ்டேட்மெண்ட்
Recommended image3
கவுதம் கம்பீர் எப்படிப்பட்டவர் தெரியுமா? முதன் முறையாக மனம் திறந்து பேசிய சஞ்சு சாம்சன்!
Related Stories
Recommended image1
தளபதிக்காக சிஎஸ்கே நிர்வாகத்துடன் மோதிய தோனி.. கண்டிஷனால் கடும் கோபம்.. கூல் கேப்டன் பொறுமையிழந்தது ஏன்?
Recommended image2
CSK SWOT Analysis: 6-வது முறையா கோப்பையை அடிக்குமா சிஎஸ்கே? முழு பலம், பலவீனம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved