- Home
- Sports
- Sports Cricket
- ஓயாத ரன் மெஷின்..! 2வது ஓடிஐயிலும் சதம் விளாசி கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சாதனை!
ஓயாத ரன் மெஷின்..! 2வது ஓடிஐயிலும் சதம் விளாசி கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சாதனை!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியிலும் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். ரன் மெஷின் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

விராட் கோலி சதம்
ராய்ப்பூரில் நடந்து வரும் இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி மீண்டும் ஒரு சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விராட் கோலி 90 பந்துகளில் தனது 53வது ஓடிஐ சதம் அடித்து அசத்தியுள்ளார். 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் விராட் சதம் அடித்துள்ளார்.
பிரம்மிக்க வைத்த கிங் கோலி
முதல் ஓடிஐயில் சூப்பர் சதம் விளாசி இருந்த விராட் கோலி இப்போது 2வது ஓடிஐயிலும் சதம் அடித்து பிரமிக்க வைத்துள்ளார். இது விராட் கோலியின் 84வது சர்வதேச சதமாகும். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில், ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் கோலி உள்ளார்.
டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்துள்ளார். விராட் கோலி இப்போது இரண்டு (அல்லது அதற்கு மேற்பட்ட) தொடர்ச்சியான ஒருநாள் இன்னிங்ஸ்களில் 11 முறை சதம் அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஆறு முறை இந்த சாதனையை செய்துள்ளார்.
ருத்ராஜ் கெய்க்வாட்டும் சதம்
முன்னதாக விராட் கோலி போன்று இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் தனது முதல் சதம் அடித்து அசத்தினார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணி கேப்டனாக இருக்கும் ருத்ராஜ் வெறும் 77 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் தனது சதத்தை நொறுக்கியுள்ளார். இது அவரது முதல் சர்வதேச சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

