- Home
- Sports
- Sports Cricket
- இந்தியாவின் பீல்டிங் மோசம்.. கேட்ச் பிடிப்பது முக்கியம்.. உண்மையை ஒப்புக்கொண்ட பயிற்சியாளர்!
இந்தியாவின் பீல்டிங் மோசம்.. கேட்ச் பிடிப்பது முக்கியம்.. உண்மையை ஒப்புக்கொண்ட பயிற்சியாளர்!
டி20 உலகக் கோப்பை தொடரின் முக்கிய கட்டத்தை நோக்கி அணி முன்னேறி வருவதால் சிறப்பான ஃபீல்டிங் அவசியம் என்றும் கேட்சகளை பிடிப்பது முக்கியம் என்றும் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை 2026
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் சூப்பர் 8 சுற்று போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவின் சமீபத்திய ஃபீல்டிங் கவலைகள் குறித்து பேசிய மோர்னே மோர்கல், அணி களத்தில் தனது செயல்பாட்டை மேம்படுத்த கூடுதல் முயற்சி எடுத்து வருவதாக கூறினார். குறிப்பாக, இரண்டு ரன்களைத் தடுக்கவும், பவுண்டரிகளைத் தடுக்கவும் கோணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கேட்ச் பிடிப்பது முக்கியம்
"நாங்கள் கடுமையாக உழைக்கும் ஒரு விஷயம் எங்கள் ஃபீல்டிங். கேட்ச்களின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம், இரண்டு ரன்களைத் தடுக்கவும், பவுண்டரிகளைத் தடுக்கவும் கோணங்களைக் குறைப்பதில் கவனம் செலுத்துகிறோம். ஆனால், தொடரின் இந்த முக்கிய கட்டத்தில் கேட்ச் பிடிப்பது நிச்சயமாக ஒரு பெரிய பங்களிப்பை வழங்கும்" என்று மோர்னே மோர்கல் கூறினார்.
கேட்ச்களை தவற விட்ட இந்திய வீரர்கள்
சமீபத்திய போட்டிகளில் தவறவிட்ட வாய்ப்புகளுக்காக இந்தியா விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கைவிடப்பட்ட கேட்ச்கள் மற்றும் மிஸ்ஃபீல்டுகள் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசிப் போட்டியில், ஜாக் லயன்-கேஷேக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் மோதல் ஏற்பட்டு கேட்ச் கைவிடப்பட்டது. பின்னர், கடைசி ஓவரில் திலக் வர்மா மற்றொரு வாய்ப்பை நழுவவிட்டார்.
அயர்லாந்துக்கு அடுத்து இந்தியா மோசம்
நடந்து வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இதுவரை ஒன்பது கேட்ச்களை தவறவிட்டுள்ளது. இது அயர்லாந்திற்கு (10) அடுத்தபடியாக, இந்தத் தொடரில் ஒரு அணி தவறவிட்ட இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். எந்தவொரு கேட்சும் எளிதானது அல்ல என்பதை ஒப்புக்கொண்ட மோர்கல், அணி தனது செயல்பாட்டில் நிலைத்தன்மையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வீரர்கள் கடினமாக உழைக்கிறார்கள்
"துரதிர்ஷ்டவசமாக, எந்த கேட்சும் எளிதானது அல்ல. வீரர்கள் கடினமாக உழைத்து, நிறைய பந்துகளைப் பிடித்து பயிற்சி செய்கிறார்கள். ஆனால், 50-50 வாய்ப்புகளைக் கூட பயன்படுத்திக் கொள்வது எங்கள் முக்கிய கவனங்களில் ஒன்றாகும். ஏனெனில், அது ஒரு பேட்டிங் இன்னிங்ஸின் வேகத்தை எப்படி மாற்றும் என்பது எங்களுக்குத் தெரியும்'' என்று மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.

