கர்நாடக மின்சாரப் பகிர்மானக் கழகம் (KPTCL) அவசரப் பராமரிப்புப் பணிகளால், பெங்களூருவின் பல பகுதிகளில் நாளை (புதன்கிழமை) மின் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.
கர்நாடக மின்சாரப் பகிர்மானக் கழகம் (KPTCL) அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால், நாளை புதன்கிழமை நகரின் பல பகுதிகளில் மின் விநியோகத்தில் தடை ஏற்படும். சோமனஹள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என KPTCL மற்றும் பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் பெஸ்காம் (BESCOM) அறிவித்துள்ளன. மேலும், இப்பகுதி மக்கள் மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் முக்கிய பகுதிகள்
சோமனஹள்ளி துணை மின் நிலையத்தின் கீழ் வரும் பின்வரும் முக்கிய பகுதிகளில் மின்தடை ஏற்படும். அதாவது ணஐபெக்ஸ் தொழிற்சாலை, சிஆர்பிஎஃப் முகாம் கேட், அடிஃபை பள்ளி சோமனஹள்ளி, யோகவன பேட்டா, அவசரலா தொழிற்சாலை, ராவுக்கோட்லு, நெட்டிகெரே, கிரிகௌடனதொட்டி, முத்துராயனபுரா, இனோரதொட்டி, சோனாரெதொட்டி, நவுக்கல்பாளையா, குடிபாளையா, நாகனவகனஹள்ளி, மல்லிபாளையா, தாசுதேவரபாளையா, வாசுதேவரபாளையா, கொல்லரபாளையா, நல்லக்கனதொட்டி, கெரேசூதர்னஹள்ளி, சாதனபாளையா, ஹொசதொட்டி, நெலகுளி, லிங்கப்பரனதொட்டி.
குண்டாஞ்சநேய டெம்பிள், கொட்டிகெஹள்ளி, காந்திநகர், பட்டரெட்டிபாளையா, வீரசாந்திரா, ஜட்டிபாளையா, திட்டஹள்ளி, கங்ககனகொட்டி, போகிபுரா, தோகதிம்மனதொட்டி, ஏடுமாடு, ராவரதொட்டி, தாத்தகுப்பே, கடிபாளையா, முக்கோட்லு, முனிநகர், மற்றும் கக்கலீபுரா சுற்றியுள்ள பகுதிகள்.
KPTCL அதிகாரிகள் அவசரப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதால், இப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடைக்கு ஒத்துழைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடிந்தால், மின் விநியோகம் முன்கூட்டியே மீண்டும் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு, நுகர்வோர் பெஸ்காம் வாடிக்கையாளர் சேவை மையமான 1912 என்ற எண்ணை அழைக்கலாம்.


