MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை முக்கிய எச்சரிக்கை.! இந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்.!

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை முக்கிய எச்சரிக்கை.! இந்தியாவில் பாதுகாப்பு தீவிரம்.!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் மதச்சார்பு பதற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 02 2026, 11:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மாநிலங்களுக்கு அறிவுரை
Image Credit : Google

மாநிலங்களுக்கு அறிவுரை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய சமீபத்திய ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியாவில் ஏற்படக்கூடியது மதச்சார்பு பதற்றங்களை முன்னெச்சரிக்கையாகக் கண்காணிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. வெளிநாட்டு சம்பவங்கள் உள்நாட்டில் எதிரொலிக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி அனுப்பப்பட்ட ஆலோசனை கடிதத்தில், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் இந்திய சமூக அமைப்பில் “எதிரொலி தாக்கம்” ஏற்படுத்தக்கூடும். என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மதக் கூட்டங்கள், பொதுப் பிரசங்கங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தூண்டுதல் உரை பரவ வாய்ப்புள்ளதால், அவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கலாம் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

22
மத்திய உள்துறை அமைச்சகம்
Image Credit : Getty

மத்திய உள்துறை அமைச்சகம்

சில தீவிர மனப்பான்மை கொண்ட குழுக்கள் வெளிநாட்டு சம்பவங்களை உள்நாட்டு உணர்வுகளைத் தூண்டக்கூடும் என்ற அச்சமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் வகையில் உளவுத்துறை தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவும் அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்கா-இஸ்ரேல் நடவடிக்கைகள் ஈரானின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பரபரப்பான நிலைமை பரந்த பிராந்திய மோதலுக்குத் தள்ளப்படுமோ என்ற கவலை எழுந்துள்ளது.

இந்தியா அனைத்து தரப்பினரையும் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என கூறினார். பல்வேறு மத, சமூக பின்னணிகள் கொண்ட இந்திய சமூகத்தில் சிறிய தூண்டுதல்கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

Related Articles

Related image1
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Related image2
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்தியா
பிரதமர் மோடி
ஈரான்
இசுரேல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா.. சாதி மறுப்பு திருமணம் செய்த சூரிய பிரகாஷ் ஆணவ கொலை
Recommended image2
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல்.. மைலேஜ் குறையுமா? ஓட்டுநர்கள் கவனத்திற்கு
Recommended image3
டெல்லி மதுபான கொள்கை.. அரவிந்த் கெஜ்ரிவால் விடுவிப்பு..! கண்ணீர் விட்டு கதறிய முதல்வர்
Related Stories
Recommended image1
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Recommended image2
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved