MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!

திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

2 Min read
Author : Rayar r
Published : Mar 01 2026, 05:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி
Image Credit : x

திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி மதுரையில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த அரசு நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமர் மோடி முருகனின் முதல் அறுபடை வீடான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்றார். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்திருந்த பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சாஷ்டாங்கமாக விழுந்து முருகனை தரிசித்த பிரதமர் மோடி

தொடர்ந்து கோயிலின் உள்ளே சென்ற பிரதமர் மோடி முருகப்பெருமானை மனமுருகி வழிபட்டார். கோயிலில் அப்படியே சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து முருகனை தரிசனம் செய்தார். இதன்பிறகு பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. அவருக்கு முருகப்பெருமானின் புகைப்படமும் வழங்கப்பட்டது. இதன்பிறகு பிரதமர் மோடி மதுரையில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார்.

22
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை
Image Credit : x

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை

பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தது இந்தியா முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் இந்த கோயில் கடந்த இரண்டு மாதங்களாக பேசுபொருளாக இருந்து வருகிறது. அதாவது திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இரண்டு முறையும் அவர் உத்தரவிட்டும் மனுதாரர் ராம ரவிக்குமார் மலையில் தீபம் ஏற்ற தமிழக காவல்துறை மறுத்து விட்டது.

திமுக, பாஜக மாறி மாறி குற்றச்சாட்டு

தனி நீதிபதியின் உத்தரவால் சட்டம், ஒழுங்கு சீரழிந்து விடும் என தமிழக அரசு குற்றம்சாட்டி மறுப்பு தெரிவித்து விட்டது. தமிழகத்தில் மதக்கலவரம் செய்ய பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டியது. இந்துக்களுக்கு விரோதமான திமுக அரசு மக்களின் மத வழிபாடுகளை தடுக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது. கடந்த மாதம் மதுராந்தகத்தில் என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ''திருப்பரங்குன்றம் விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலில் திமுக ஈடுபட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிப்பதில்லை'' என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
தமிழத்துக்கு 9 மடங்கு அதிக நிதி.. மதுரையில் திமுக அமைச்சர் முன்பு லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி!
Related image2
திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பிரதமர் மோடி
திருப்பரங்குன்றம்
மதுரை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழத்துக்கு 9 மடங்கு அதிக நிதி.. மதுரையில் திமுக அமைச்சர் முன்பு லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி!
Recommended image2
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Recommended image3
Now Playing
ரயில்களில் வனவிலங்குகள் அடிபடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது - ராஜ கண்ணப்பன்
Related Stories
Recommended image1
தமிழத்துக்கு 9 மடங்கு அதிக நிதி.. மதுரையில் திமுக அமைச்சர் முன்பு லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி!
Recommended image2
திருப்பரங்குன்றம் தீபத்தை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர்.. எழுந்த சர்ச்சை.. குவியும் எதிர்ப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved