கள்ளக்காதலால் மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தும், மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்வதாக மனைவி கூறியதால் மனமுடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடக மாநிலம் குர்லாஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜூ. கூலி தொழிலாளியான இவருக்கும் பாகேபள்ளியை சேர்ந்த சுனிதா என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திடீரென கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் சமூகவலைதளம் மூலம் சுனிதாவுக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பழகி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுனிதா கணவரை கழற்றிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து பெற்றோர், அவரை தேடி கண்டுபிடித்து கணவருடன் வாழுமாறும் அறிவுரை வழங்கினர்.

பின்னர் முனிராஜூவும் சுனிதாவை மன்னித்து ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். சுனிதாவின் பெற்றோர் சென்ற பிறகு, மீண்டும் முனிராஜூவுடன் தகராறில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் சுனிதா, கள்ளக்காதலனுடன் செல்வதாக மீண்டும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த முனிராஜூ இரவில் அனைவரும் தூங்கிய பிறகு முனிராஜூ, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்

காலையில் எழுந்து பார்க்கும்போது, முனிராஜூ தூக்கில் தொங்கியதை பார்த்து அலறி கூச்சலிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனிராஜூவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடி, சமாதானம் பேசி அழைத்து வந்த நிலையில் மீண்டும் கள்ளக்காதலனுடன் செல்ல மனைவி அடம் பிடித்ததால் மனமுடைந்து முனிராஜூ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.