- Home
- Tamil Nadu News
- தவெகவில் இணையபோகும் அந்த முக்கிய விஐபி யார்? ட்விஸ்ட் வைத்து பேசிய செங்கோட்டையன்! அலறும் திமுக, அதிமுக!
தவெகவில் இணையபோகும் அந்த முக்கிய விஐபி யார்? ட்விஸ்ட் வைத்து பேசிய செங்கோட்டையன்! அலறும் திமுக, அதிமுக!
தவெகவில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள் அதிமுகவில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார். அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழக வெற்றி கழகம் கட்சி அலுவலகம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: வேலூரில் நடைபெற்ற தவெக-வின் நிகழ்ச்சி ஒரு புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தளபதி விஜய்யின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கும்போது, மக்கள் மத்தியில் பெரும் எழுச்சியும் ஆர்ப்பரிப்பும் ஏற்படுகிறது.
தவெக - திமுக இடையே போட்டி
தமிழக அரசியலில் தவெக - திமுகவிற்கும் இடையேதான் நேரடிப் போட்டி. ஆளுங்கட்சியாக இருப்பவர்களை விமர்சிப்பதே முறையான அரசியல் என்பதால், எங்கள் இலக்கு திமுக மட்டுமே. தளபதியின் வாகனத்திற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன. அந்தப் பெருங்கூட்டத்தில் ஒருமுறை நானும் சிக்கிக் கொண்டேன். அந்த அளவிற்கு மக்கள் ஆதரவு பெருகியுள்ளது. 8 வயது சிறுவர்கள் முதல் 45 வயது பெரியவர்கள் வரை, அனைவரும் அவரது பெயரை உச்சரிப்பதோடு, அவருக்குப் போட்டியிட ஓட்டு போட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஸ்.பி. வேலுமணிக்கு செங்கோட்டையன் பதிலடி
தவெக-விற்குச் சென்றவர்கள் மீண்டும் அதிமுக-விற்கு திரும்புவார்கள் என்ற எஸ்.பி. வேலுமணியின் கருத்திற்கு: "தேர்தல் வரட்டும், வேட்பாளர்கள் அறிவிக்கப்படட்டும். அப்போது எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். தவெக-வில் மரியாதை இல்லை என்று சொல்பவர்கள், அதிமுக-வில் எங்களுக்கு என்ன மரியாதை கொடுத்தீர்கள் என்பது அனைவரும் அறிவார். அதை நான் உதாரணம் காட்டி விளக்க வேண்டிய அவசியமில்லை.
சசிகலா விமர்சனத்துக்கு பதில்
மேலும் சசிகலா அவர்கள் மிகத் தெளிவாகக் கூறிவிட்டார். தன்னை யாரெல்லாம் முதுகில் குத்தினார்கள், நெஞ்சில் குத்தினார்கள் என்பது அவருக்குத் தெரியும். அவரது கணவர் மறைந்தபோது, சிறைச்சாலையில் 15 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 5 நாட்கள் மட்டுமே அனுமதி கிடைக்க யார் காரணமாக இருந்தார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துரோகத்தின் மொத்த உருவமாக இருப்பவர்கள் பேசுவதைப் பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.
விரைவில் பொள்ளாச்சி விஐபி தவெகவில்
குறிப்பாக அதிமுக திமுகவின் நட்பில் உள்ள பொள்ளாச்சி விஐபி விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்றார். பெயரை குறிப்பிடாமல் விஐபி என்று செங்கோட்டையன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக, அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகர் தவெகவில் இணைந்து வருது குறிப்பிடத்தக்கது.

