கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணியை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் தவெக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உருவான கூட்ட நெரிசலில் சிக்கி 36 குடும்பங்களைச் சேர்ந்த 41 உறுப்பினர்கள் பரிபாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம், தமிழக வெற்றி கழகம் சார்பில் தலா 20 லட்சம் உட்பட பல்வேறு அரசியல் அமைப்புகள் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக ஆட்சி அமைத்த விஜய் தலைமையிலான தவெக அரசு உயிரிழந்த குடும்பத்தினரில் 31 உறுப்பினர்களுக்கு அரசுப் பணி வழங்கப்பட்டது. கடந்த ஜூலை 10ம் தேதி வழங்கப்பட்ட இந்த அரசு பணியானை பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
இந்த நிலையில் அரசின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
விசாரணையின் போது தினசரி சாலை விபத்துகளில் பலர் உயிரிழக்கின்றர். அவர்கள் குடும்பத்தினர் அரசு வேலை கோரினால்..? சிவகாசி பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் அரசு வேலை கோரினால்..? என தமிழக அரசுக்கு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் பாதக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்குவதற்கு பதிலாக திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கலாமே என அறிவுரை வழங்கினர்.


